This Article is From Jul 22, 2019

மக்களவையில் நிறைவேறியது ஆர்.டி.ஐ. திருத்த மசோதா! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!!

தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவற்றில் திருத்தம் கொண்டுவர ஆர்.டி.ஐ. திருத்த மசோதா வழிவகை செய்கிறது.

நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

New Delhi:

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஆர்.டி.ஐ. திருத்த மசோதா நிறைவேறியது. இதனை ஆர்.டி.ஐ திருத்த மசோதா என்று அழைப்பதற்கு பதிலாக நீக்க மசோதா என்றே அழைக்கலாம் என எதிர்க்கட்சிகள் கண்டித்த்துள்ளன. 

நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அங்கு ஆளுங்கட்சிக்கு உறுப்பினர்கள் பலம் குறைவு என்பதால் மசோதா நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. 

மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டுவருவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. தற்போது மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளன. இனிமேல் இதனை மத்திய அரசு முடிவு செய்யும் என்று இந்த மசோதா கூறுகிறது. 

திருத்த மசோதா ஆர்.டி.ஐ.யின் வலிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று செயற்பாட்டார்கள் கூறி வருகின்றனர். ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரும் அடி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார். 

இதற்கிடையே ஆர்.டி.ஐ. சட்டத்தை வலிமையிழக்கச் செய்யும் எதுவும் திருத்த மசோதாவில் இடம்பெறவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார். 

.