This Article is From Jan 30, 2019

லோக் பால் அமைக்கக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணா விரதம்

உண்ணாவிரதத் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீசுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

லோக் பால் அமைக்கக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணா விரதம்

லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வரும் வரை உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் ஹசாரே.

Mumbai:

ஊழலை ஒரிக்கும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை தொடங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் உள்ள அவரது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் இந்த உண்ணா விரதம் தொடங்கப்பட்டுள்ளது. 

உண்ணாவிரதம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீசுக்கு அன்னா ஹசாரே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கிடையே பட்னாவீஸ் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவருவது தொடர்பாக நேற்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஹசாரேவுக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே அமைச்சர் கிரிஷ் மகாஜன் தூதுவராக இருந்து வருகிறார். ஹசாரேவின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்த அவர், உண்ணா விரதத்தை ஹசாரே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

ஊழலை ஒழிக்கும் வகையில் தேசிய அளவில் லோக்பால் அமைப்பையும், ஒவ்வொரு மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பையும் அமைக்க வேண்டும் என்பது ஹசாரேவின் கோரிக்கையாக உள்ளது. 

லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், லோக்பால் அமைக்கப்படவில்லை என்று மோடி அரசு மீது ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். 
தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின்னரே உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்றும் ஹசாரே கூறியுள்ளார். 
 

.