This Article is From Apr 09, 2019

பிரதமர் மோடியின் அழகுக்கு காரணம் ‘இது தான்’ விளக்குகிறார் முதலமைச்சர் குமாராசாமி

பிரதமர் மோடி மக்கள் முன்பும் கேமரா முன்பு வருவதற்கு முன் வேக்ஸ் மேக்கப் போட்டு பொலிவுடன் வந்து நிற்கிறார்” என்று குமாரசாமி பெங்களூரில் ஒரு பேரணியில் இதைக் கூறினார். 

பிரதமர் மோடியின் அழகுக்கு காரணம் ‘இது தான்’ விளக்குகிறார் முதலமைச்சர் குமாராசாமி

பிரதமர் நரேந்திர மோடியின் அழகுக்கு காரணம் வேக்ஸ் மேக்கப் போடுவதுதான் (Reuters)

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மோடி அழகுக்கு காரணம் வேக்ஸ் மேக்கப் போடுவதுதான் காரணம்
  • எங்கள் முகங்களை காட்ட மீடியாக்கள் விரும்புவதில்லை
  • பாஜக வேட்பாளர்கள் மோடியைப் போல் மக்கள் முன்பு வாக்கு கேட்க வேண்டும்
Bengaluru:

பிரதமர் நரேந்திர மோடியின் அழகுக்கு காரணம் வேக்ஸ் மேக்கப் போடுவதுதான் என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி பேசியுள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் ஏன் அவரை அதிகம் விரும்புகிறார்கள் என்ற தியரியை முன்வைத்து பேசினார்.

“பிரதமர் மோடி மக்கள் முன்பும் கேமரா முன்பு வருவதற்கு முன் வேக்ஸ் மேக்கப் போட்டு பொலிவுடன் வந்து நிற்கிறார்” என்று குமாரசாமி பெங்களூரில் ஒரு பேரணியில் இதைக் கூறினார். 

“எங்கள் முகங்களை பாருங்கள் முதல்நாள் ஷவரில் குளித்து விட்டு வெளியேறுவோம் பின் மீண்டும் மறுநாள்தான் ஷவரில் நிற்போம். அதனால் அழகு இல்லாத எங்களை ஊடக நண்பர்கள் எங்கள் முகங்களைக் காட்ட விரும்பவில்லை” என்று கூறினார். 

பாஜக வேட்பாளர்கள் மோடியை பார்த்து அதேபோல் மக்கள் முன்பு நின்று வாக்கு கேட்கவும் என்று கூறினார்.  கர்நாடாக முதலமைச்சர் குமாரசாமி காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணா பைரே கவுடாவிற்காக வாக்கு சேகரிக்கும் தேர்தல் பேரணியில் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் ஏப்ரல் 18 மற்றும் 23 தேதிகளில் ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது. முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்படும். 

கடந்த ஆண்டு காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணியில் கர்நாடகவில் ஆட்சி அமைத்தது. 

.