This Article is From Oct 02, 2018

ஸ்வச் இந்தியா 12 மணி நேர க்ளீனத்தான் 2018-ன் ஹைலைட்ஸ்!

என்.டி. டிவியின் டெட்டால் பனேகா சுவச் பிரச்சாரம், தூய்மையான இந்திய திட்டத்திற்கு ஆதரவு அளிக்க செயல்படுகிறது

ஸ்வச் இந்தியா 12 மணி நேர க்ளீனத்தான் 2018-ன் ஹைலைட்ஸ்!

என்.டி. டிவியின் டெட்டால் பனேகா ஸ்வச் பிரச்சாரம், தூய்மையான இந்திய திட்டத்திற்கு ஆதரவு அளிக்க செயல்படுகிறது. 2018 ஆம் ஆண்டு, ஐந்தாவது என்.டி. டிவி க்ளீனத்தான் சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. அதில், முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் இரவு 9 மணி, 12 மணி நேர தொடர் நேரலை நிகழ்ச்சியாக நடைப்பெற்றுது.
 

இரவு 09.51: - க்ளீனத்தான் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக பாடகர் சுக்விந்தர் சிங் பாடல்ளை பாடி அசத்தினார்.

636741137986297156.

இரவு 09.40: - க்ளீன் இந்தியா குறித்து இன்று முழுவதும் நடந்த நிகழ்வுகளை சிறுகுறிப்பாக ராகேஷ் கபூர், ரோனி சீகிவாலா, அமிதாப் பச்சன் மற்றும் விக்ரம் சந்திரா ஆகியோர் வழங்கினர்.

636741129712816119.

இரவு 09.30: - க்ளீனத்தான் நிகழ்ச்சி மேடையில் பாடிய ஷில்பா ராவ்.

636741126480275314.

இரவு 09.21 - க்ளீனத்தான் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக, தொடர்ந்து பின்னணி பாடகர்கள் அங்கித் திவாரி, ஹார்டி சாண்டி, ஜாஸி உள்ளிட்டோர் பாடி வருகின்றனர்.

636741121004721768.

இரவு 09.05 - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை டாப்ஸி பானு, இந்திய குடிமகனாக உங்களில் எத்தனை பேர் இல்லங்களில் குப்பைகளை மறுசுழற்சி செய்கிறீர்கள்? மறுசுழற்சிக்கு பயன்படும் குப்பை, மறுசுழற்சிக்கு பயன்படாத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகளை நான் என் வீட்டில் பிரித்து வைத்துள்ளேன்.

636741111478703182.

இரவு 08.55: - சுற்றுச்சுழல் துறையில் இருந்தபோது கழிவு மேலாண்மை குறித்து பல விதிமுறைகளை கொண்டு வந்தேன். மனிதவள மேம்பாட்டு அமைச்சார பின்னர், மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டோம். அதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

636741105453238614.

இரவு 08.48: - மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

636741100317006549.

இரவு 08.37: - ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மிக அழகான பகுதி. ஆனால் நாங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறோம். இதுகுறித்த சமூக விழிப்புணர்வு அங்கிருக்கும் மக்களிடமும் ஏற்பட்டுள்ளது ஆச்சர்யமளிக்கிறது.

636741094293061860.

இரவு 08.29: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற, உமர் அப்துல்லா.

636741089694022306.

இரவு 08.26: - க்ளீனத்தானின், கடைசி ஒரு மணி நேரத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலையை கலைஞர்கள் செய்து ஆச்சர்யபடுத்தினர்.

636741087654632732.

இரவு 08.14: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற உமா பாரதி, குப்பையை ஒழியுங்கள், இந்தியாவை விரும்புங்கள் என்றார்.

636741080820891346.

இரவு 08.02: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற உமா பாரதி, தூய்மை இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்து தற்போது தூய்மை இந்தியாவை உருவாக்கும் வழியில் நாம் பயணிக்கிறோம்.

636741069147246269.

இரவு 07.09 - பிரதமர் நரேந்திர மோடியால், துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் ஒரு நல்ல தொடக்கம் என்றார்.

636741045614010608.

இரவு 07.03 - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹேமா மாலினி.

636741037938870655.

இரவு 07.00 - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய டூச்சி ரெய்னா.

636741037395504736.

மாலை 06.42 - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் அப்ரோஸ் ஷா பங்கேற்று பேசும் போது, இது போன்ற திட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவது பெரும் சவாலானது. இந்த திட்டங்கள் அடித்தட்டு மக்களையும் சென்று சேர வேண்டும். அப்போது தான் நம்மால் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

636741025683264351.

மாலை 06.36 - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பரமேஸ்வரன் ஐயர் பேசும் போது, தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகத்தினர் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். இந்த திட்டத்தை 2019 அக்.2-ஆம் தேதிக்குள் வெற்றி பெற செய்வோம் என்றார்.

636741021416212262.

மாலை 06.30: - குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், பரமேஸ்வரன் ஐயர், க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

636741018125128240.

மாலை 06.28: - தூய்மை திட்டம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். இருப்பினும் இப்போதாவது இந்த திட்டத்தை தொடங்கியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

636741017250095524.

மாலை 06.21: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பங்கேற்று பேசிய போது, கழிவறை இருக்கும் இடங்களில் போதுமான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஏனெனில், தண்ணீர் இல்லாத கழிவறைகள் மேலும் அசுத்தத்தையும், நோய்களையும் பரப்புகிறது.

636741012756367981.

மாலை 06.10: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் சோனு நிகாம் பங்கேற்று பேசிய போது, பொது கழிவறைகள் எங்கும் சுத்தமாக இல்லை. ஏனெனில் அதை நமக்கு சரியாக பயன்படுத்த தெரிவதில்லை. தற்போது தூய்மை என்பது அரசு மற்றும் உங்களை போன்ற நிறுவனங்களின் முயற்சியால் மக்களின் வாழ்க்கை மேம்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

636741006017102823.

மாலை 06.01: - க்ளீனத்தான் பாடகர் தர்ஷன் ராவல், உற்சாகமாக பாடினார்.

636741000776734723.

மாலை 05.52: - நம்மை சுற்றி குப்பைகளை வீச பழகிய நாம், தற்போது அதனை தூய்மைப்படுத்தவும் தொடங்கியுள்ளோம். நாங்கள் தற்போது கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். கடல் வளம் கொண்ட ஒரு சில நகரகங்களில், எங்கள் நகரும் ஒன்று. ஆமை மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்கள் எங்கள் கடற்கரைக்கு வருகை தருகின்றன. நாம் அதனை பாதுகாக்க வேண்டும் என்றார்.

636740995261485694.

மாலை 05.49: - சிவசேனாவின் ஆதித்யா தாக்ரே, தாதர் கடற்கரையை தூய்மை படுத்துவதின் மூலம் க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

636740993373511695.

மாலை 05.47: - சூரியன் மறையும் வேளையில் க்ளீனத்தான் நிகழ்வின் கடைசி நான்கு மணி நேர தொடக்கத்தில் ஜாவித் அலி ஆத்மார்தமாக பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
 

636740991393494784.

மாலை 05.43: - என்.டி. டிவியின் டெட்டால் பனேகா சுவச் இந்தியாவிற்கான முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்

 

636740989657937723.


மாலை 05.39: - தூய்மையான இந்தியா குழந்தைகளை நம்பி உள்ளது என்பதை சில்லா பரிஷாத் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நிரூபித்து காட்டினர். 

636740987464505426.


மாலை 05.24: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் அசாமின் இசைக் கலைஞர் சுனிதா பூயான், புகழ்பெற்ற பாடலுக்கு இசையமைத்து பாடினார். 

 

636740978162856406.


மாலை 05.07: - சுத்தமான இந்தியாவே ஆரோக்கியமான இந்தியா என வல்லுநர் குழுவினர் க்ளீனத்தான் நிகழ்ச்சியில் விவாதம் மேற்கொண்டனர். 

 

636740967438596350.


மாலை 04.50: - கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் பாபூல் சுப்ரியோ க்ளீனத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது, தூய்மை முறையை நமது வாழ்வில் மீண்டும் கொண்டுவந்ததற்கு நான் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்த நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றார். 

 

636740958371266727.


மாலை 4.36: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் தொலைபேசி வழியாக ஜெயா பச்சன் பங்கேற்று பேசிய போது, மும்பையில் மரம் நடுவதற்கான இடம் எங்கே உள்ளது? வெட்ட வெளியான இடம் எங்குள்ளது? அரசின் நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்

 

636740949788176952


மாலை 04.21: - தாராவி ராக்ஸ் எனும் இசைக்குழுவினர் குப்பை தொட்டிகளை வைத்து இசைக் கச்சேரியை அரங்கேற்றினர்.

 

636740939916640873.


மாலை 04.11: - நைனா லால் கிட்வாய் க்ளீனத்தானில் பங்கேற்று பேசும்போது, இந்திய குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் இந்த கேள்வியை கேட்க கடமைப்பட்டுள்ளோம். மனித கழிவுகள் எங்கே செல்கின்றன? கழிவுகளை அகற்ற அறிவியில் ரீதியிலான முறையினை பின்பற்றும் வரை நாம் மாசுப்படுத்திக்கொண்டுதான் இருப்போம் என்றார்.  

 

636740934899360169.



மாலை 04.09: - பரினீத்தி சோப்ரா பேசும்போது, எனக்கு தற்போது 29 வயது ஆகிறது. நான் உலக சுற்றுச்சூழலை நினைத்து வருந்துகிறேன். எனது குழந்தைகள் வளரப்போகும் உலத்தை நினைத்து வருத்தப்படுகிறேன். இதேநிலை நீடித்தால் இன்னும் 15 வருடங்களில் உலகம் என்னவாகும் என்றார். 

 

636740933493442009.



மாலை 04.06: - கடந்த வருடம் வடக்கு பகுதியில் படப்பிடிப்பின் போது, பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் படக்குழுவினர் மூச்சு விட சிரமப்பட்டனர். இப்படி இருப்பது மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்த சுற்றுச்சூழல் அல்ல என்றார்.

 

636740931972392063.



மதியம் 03.58: - அர்ஜூன் கபூர் பேசும் போது, அடிப்படை கல்விகளை மக்கள் கற்றுவருவதாக நான் நினைக்கிறேன். நமக்கு பின் வரும் தலைமுறைகள் மாற்றத்தை நிச்சயம் பார்ப்பார்கள் என நம்புகிறேன் என்றார். 

 

636740926958543563.



மதியம் 03.56: - பரினீத்தி சோப்ரா பேசும்போது, ஸ்குபா டைவின் போது ஆழ்கடலை பார்த்துள்ளேன். பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மோசமடைந்து வருகிறது. ஆனால் இப்போது அதனை தடுப்பதற்கு பலர் முன்வந்துள்ளனர் என்றார்.

 

636740926058237924.

 

மதியம் 03.49: - நமஸ்தே இங்கிலாந்து படக்குழுவினர் அர்ஜூன் கபூர், பரினீத்தி சோப்ரா மற்றும் இயக்குநர் விபூல் ஷா க்ளீனத்தான் நிகழ்வில் இணைந்தனர்.

 

636740921862636247.

 

மதியம் 03.48: - நாங்கள் பசுமையை வளர்க்க மரம் நடுதலை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம். மதக்குருக்கள் மக்களை தூய்மை முறையை பின்பற்ற வழிநடத்த வேண்டும் என இமாம் உமார் அகமத் தெரிவித்தார்.

 

636740920729727075.

 

மதியம் 03.45: - சுவாமி சிந்தானந்தா சரஸ்வதி க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, நாங்கள பக்தர்களிடம் கங்கை நதியை தூய்மையாக பராமரிக்கவும் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அகற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

 

636740918972329336.

 

மதியம் 03.35: - சுகாதாரமற்ற முறையினால் பரவும் நோய்களை கை கழுவுவது போன்ற எளிமையான பழக்கவழங்களின் மூலம் தடுக்கலாம் என குழு கலந்து ஆலோசித்தது.

 

636740912156153562.

 

மதியம் 03.18: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் விபா சாரஃப் பங்கேற்றார்.

 

636740903021741710.

 

மதியம் 03.00: - எங்கள் மாநிலத்தில் சுவட்ச் பாரத் திட்டம் சிறந்த முறையில் செயல்பட பெண்கள் உறுதுணையாக இருக்கின்றனர். அவர்களுக்கு கட்டிட வேலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் கழிவறை கட்டுமான பணிகளில் பெண்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

 

636740892454110842.

மதியம் 02.43: - ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் க்ளீனத்தான் நிகழ்ச்சியில் இணைந்தார்.

636740885491133906.

மதியம் 02.31 - பஞ்சாபில் உள்ள 13,000 கிராமங்கள் மற்றும் மாநகரங்களில் 100 சதவீத துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

636740874603536811.

மதியம் 02.21 - இந்த வருடத்திற்குள் வைக்கோல் எரிப்பை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும். மத்திய அரசிடமிருந்து இருந்து நிதியுதவி பெற்று அறுவடைக்கு பின் இருக்கும் வைக்கோலை எரிப்பதற்கு பதிலாக அதனை இயந்திரங்களை கொண்டு இயற்கையான முறையில்ன அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

636740874603536811.

மதியம் 02.11 - பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமிர்ந்தர் சிங் க்ளீனத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது, காற்று மாசுப்பாட்டை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.

636740863712039326.

மதியம் 02.03 - இடம்; சில்லா பரிஷாத் உயர்நிலைப்பள்ளி, நார்சிங்கி, ஹைதராபாத்.

க்ளீனத்தான் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பேசியபோது, எங்கள் பள்ளியில் தூய்மை பழக்கவழங்களான கை கழுவுதல், மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டிய முறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் பள்ளி வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் பள்ளியில் சேர்பவர்களின் எண்ணிக்கையும், மாணவர்களின் தினசரி வருகையும் சீராகியுள்ளது. மேலும் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை 32 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

 

மதியம் 01.57: - சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா க்ளீனத்தானில் இணைந்தார்.

மதியம் 01.53: - பாடகி ரிச்சா ஷர்மா க்ளீனத்தானில் பாடினார்.

636740852057676686.

மதியம் 01.38: - க்ளீனத்தான் நிகழ்ச்சியில் கிரண்பேடி; புதுச்சேரியில் அனைத்து விதமான துப்பரவு பணிகளையும் மேற்கொண்டோம். அங்கு 97 கிராமங்களில் கழிவறை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். கழிவறை வசதியின் மூலம் பெண்களே பெரும்பாலான அளவில் பயன்பெறுகின்றனர்.

636740842786292336.

மதியம் 01.33: - புதுச்சேரியின் ஆளுநர் கிரண்பேடி க்ளீனத்தான் நிகழ்ச்சியில் இணைந்தார்.

636740850110264450.

மதியம் 01:30: - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நிகழ்ச்சியில் இணைகிறார்

636740838100834565.

மதியம் 12:46 - தூய்மையான இந்தியாவிற்கு, பிரதமர் கூறும் 4 தேவைகள்

636740811482616795.

மதியம் 12:43 - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

636740817723289575.

மதியம் 12:28 - கவிதா சேத் இசை நிகழ்ச்சி

636740801111396262.

காலை 11:54 - 8 கிராமங்களை தத்தெடுத்து பராமரித்து வருகிறோம் - நடிகர், அரசியல் கட்சி தலைவர் கமல்ஹாசன்

636740780386115911.

காலை 11:06 - காற்று மாசுபாடு இந்தியாவின் முக்கிய பிரச்சனை - கனீஸ் சுக்லா

636740753678351249.

காலை 10:40 - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நிகழ்ச்சியில் இணைகிறார்

636740736351954380.

காலை 09:57 - 2019 ஆம் ஆண்டிற்குள் கங்கை நதி 90% தூய்மை ஆகும் - நிதின் கட்காரி

636740710284434665.

காலை 09:45 - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நிகழ்ச்சியில் இணைகிறார்

636740706959965588.

காலை 09:31 - பிரனய் ராய், ராகேஷ் கபூர், விக்ரம் ஆகியோர் அமிதாப் பச்சனுடன் உரையாடல்

636740694562706611.

காலை 09:03 - 12 மணி நேர தொடர் நேரலை ஆரம்பம்

636740677812280684.

காலை 02:01 - சுவச் இந்தியாவின் குறிக்கோள்

636740633340056533.

காலை 02:00 - பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பனேகா சுவச் இந்திய சீசன் 5 தொடங்கி வைத்தார்

636740634074840977.
.