வைரல் வீடியோ: சுற்றுலா வாகனத்தைச் சுற்றிவளைத்த சிங்கங்கள்!

சிங்கம் ஜீப்பின் கண்ணாடியை உடைப்பதைக் காணலாம்.

வைரல் வீடியோ: சுற்றுலா வாகனத்தைச் சுற்றிவளைத்த சிங்கங்கள்!

ஒரு வைரல் வீடியோ, ஜீப்பைச் சுற்றியுள்ள சிங்கங்களை காட்டுகிறது.

இணையத்தில் மீண்டும் தோன்றிய ஒரு பழைய வீடியோ சுற்றுலா ஜீப்பின் மேல் ஒரு சிங்கம் ஏறுவதைக் காட்டுகிறது. இந்த பயங்கரமான வீடியோ கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவின் ஹார்ட்பீஸ்போர்ட்டில் உள்ள லயன் அண்ட் சஃபாரி பூங்காவில் படமாக்கப்பட்டது.

இந்த காட்சிகளில், சிங்கங்கள் வெள்ளை சுற்றுலா ஜீப்பை நெருங்குகிறது. அதில் ஒரு சிங்கம் வாகனத்தின் மேல் அமர்ந்து அதன் கதவில் சாய்வதைக் காணலாம், மற்ற சிங்கங்கள் மூன்று பக்கங்களிலிருந்தும் அதைச் சுற்றி வருகிறார்கள். அந்த சிங்கம் வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைக்க முயல்கிறது. சில பதட்டமான தருணங்களுக்குப் பிறகு, டிரைவர் மெதுவாக ஜீப்பைத் திருப்புகிறார். மேலே இருந்த பெரிய சிங்கம் கீழே குதித்து. அதிர்ஷ்டவசமாக, உள்ளே இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

"இந்த குறிப்பிட்ட நாளில், மூன்று இளம் ஆண் சிங்கங்கள் இருந்தன, அவை வாகனங்களை ஆராய விரும்பின, வாகனத்தின் பேனட்டில் ஏற முடிந்தது" என்று பூங்காவின் பொது மேலாளர் ஆண்ட்ரே லாகாக் (Andre LaCock) News24 இடம் கூறினார். வீடியோவில் உள்ள சிங்கங்கள் புதியவை என்றும், கொஞ்சம் உற்சாகமாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வீடியோ, வியாழக்கிழமையன்று ரெடிட்-ல் (Reddit) பகிரப்பட்ட பின்னர் மீண்டும் வைரலாகியுள்ளது. அதை கீழே காண்க:

A white Jeep! My favourite from r/AnimalsBeingJerks

இந்த காட்சிகள் 12,000-க்கும் மேற்பட்ட 'அப்வோட்ஸ்' மற்றும் நூற்றுக்கணக்கான கருத்துகளைச் சேகரித்தன.

"இது எப்படிப் பாதுகாப்பானது? இந்த சிங்கங்கள் காரைத் திறக்கும் திறன் கொண்டவை" என்று ஒருவர் எழுதினார். "அந்த சிங்கங்கள் மிகப்பெரியவை" என்று மற்றொருவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சிங்கங்கள் ஒரு டிரெய்லரில் வைக்கப்பட்டு, பூங்காவின் ஒரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்த சிங்கங்கள் பொதுமக்களுக்குத் திறக்கப்படவில்லை.

சமீபத்தில், சத்தீஸ்கரில் உள்ள நந்தன்வன் ஜங்கிள் சஃபாரி என்ற இடத்தில் ஒரு புலி சுற்றுலா வாகனத்தைத் துரத்திச் சென்று, திரைச்சீலைப் (curtain) பிடிக்க முயன்றது.

Click for more trending news