This Article is From Dec 30, 2018

பிரபல திரைப்பட இயக்குநர் மிருனாள் சென் 95 வயதில் காலமானார்!

பிப்ரவரி 14, 1923 ஆம் ஆண்டு தற்போது வங்கதேசத்தில் இருக்கும் ஃபரித்பூரில் மிருனாள் சென் பிறந்தார்

பிரபல திரைப்பட இயக்குநர் மிருனாள் சென் 95 வயதில் காலமானார்!

ஹைலைட்ஸ்

  • 1955-ல் தனது முதல் படத்தை வெளியிட்டார் சென்
  • தாதா சாஹெப் விருது பெற்றவர் சென்
  • பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது
Kolkata:

மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர் மிருனாள் சென், இன்று காலை இயற்கை எய்தினார். உடல் நிலை சரியில்லாமல் கடந்த சில மாதங்களாக சென் அவதிப்பட்டு வந்தார்.

சத்யஜித் ரே மற்றும் ரித்விக் கட்டக் ஆகியோருடன் சேர்ந்து சென், வங்கத் திரைப்படத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்.

பிப்ரவரி 14, 1923 ஆம் ஆண்டு தற்போது வங்கதேசத்தில் இருக்கும் ஃபரித்பூரில் மிருனாள் சென் பிறந்தார். மேற்கு வங்கத்துக்கு இயற்பியல் படிக்க வந்தவர், திரைப்படங்கள் மீது ஆர்வமானார்.

 

 

 

1955 ஆம் ஆண்டு, மிருனாள் சென்னின் முதல் திரைப்படமான ‘ராத் போர்' வெளியானது. பல தேசிய விருதுகளை வாங்கிய சென், 2005 ஆம் ஆண்டு, திரைப்படத் துறையில் கொடுக்கப்படும் உச்சபட்ச விருதான தாதாசாஹெப் பால்கே விருதையும் பெற்றார். 1983 ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.

சென் இறந்ததைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் ஆகியோர் ட்விட்டர் மூலம் சென்னுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

.