This Article is From Jul 18, 2018

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சரமாரி தாக்குதல்!

தமிழக தலைநகரில் நடந்துள்ள இந்த சம்பவம் மாநில அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சரமாரி தாக்குதல்!

சென்னையில் இருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த மற்றும் அங்கு வேலை பார்த்து வந்த 17 பேரை கைது செய்துள்ளது காவல் துறை.

இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 12 பேரையும்  போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் மகிளிர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 17  பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க, குற்றவாளிகளை கொண்டு செல்லும் போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து, ‘குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் சார்பில் சங்கத்தைச் சேர்ந்த எந்த வழக்கறிஞரும் ஆஜராகமாட்டோம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தமிழக தலைநகரில் நடந்துள்ள இந்த சம்பவம் மாநில அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.