This Article is From Feb 10, 2019

கொல்கத்தா காவல் ஆணையரிடம் 2வது நாள் சிபிஐ விசாரணை தொடக்கம்!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்த விசாரணையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான குணால் கோஷூம் சிபிஐ முன்பு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா காவல் ஆணையரிடம் 2வது நாள் சிபிஐ விசாரணை தொடக்கம்!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • திரிணாமுல் முன்னாள் எம்.பி. குணால் கோஷ் சிபிஐ விசாரணையில் ஆஜராகிறார்.
  • ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
  • சிபிஐ அதிகாரிகளுக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு தருவதாக கூறப்படுகிறது.
Shillong:

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் ஷில்லாங்கில் வைத்து இன்று இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். முதல் நாளான நேற்று ராஜீவ் குமாரிடம் சுமார் 8 மணி நேரமாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டவது நாளாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள் இன்று காவல் ஆணையர் ராஜீவ் குமார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான குணால் கோஷ் ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் விசாரிக்கின்றனர். இதற்காக, குணால் கோஷூம் சிபிஐ முன்பு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று காலை, 11 மணிக்கு தொடங்கிய சிபிஐ அதிகாரிகளின் விசாரணை இரவு 7.30 வரை நீடித்துள்ளது. இதில் 3 மூத்த சிபிஐ அதிகாரிகள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணையில் ஈடுபட்டதாக தெரிகிறது. எனினும் விசாரணை குறித்த தகவல் விவரங்களை சிபிஐ தெரிவிக்கவில்லை.

தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளது. முதலில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடக்கும். அதன் பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

முன்னதாக, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து விசாரிக்க ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமைத்தார். ஆனால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கடந்த 3-ஆம் தேதி முயற்சித்தனர். ஆனால், மேற்கு வங்க காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராஜீவ் குமாருக்குக் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

.