பார்வையற்ற நபரை ஓடிச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்ட கருணை உள்ளம்! வைரலாகும் வீடியோ

விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் சுப்ரியா. இந்த சம்பவம் திருவல்லா நகரில் நடந்திருக்கிறது. இதனை ஜோஷ்வா என்ற நபர்தான் பதிவு செய்து இணையத்தில் விட்டுள்ளார். இதைப் பதிவு செய்யும்போது சுப்ரியாவுக்கு எதுவும் தெரியாது.

பார்வையற்ற நபரை ஓடிச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்ட கருணை உள்ளம்! வைரலாகும் வீடியோ

உதவி செய்த சுப்ரியாவை தற்போது பல்வேறு நபர்கள் பாராட்டி வருகின்றனர்.

அன்றாட வாழ்வில் பலரும் பலவிதமான உதவிகளை செய்திருப்பார்கள். அவற்றில் சில சம்பவங்கள் மற்றவர்களால் படம் பிடிக்கப்பட்டு வைரலாகி விடும். அப்படிப்பட்ட நிகழ்வுதான் கேரளாவில் நடந்துள்ளது.

இங்கு பார்வையற்ற நபர் ஒருவர் பேருந்துக்காக தள்ளாடி சென்று கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த பெண் ஒருவர் ஓடிச் சென்று பேருந்து நடத்துனரிடம் சொல்ல, அவரும் பேருந்தை சற்று நேரம் நிறுத்தியுள்ளார். 

இதன்பின்னர் ஓடிச்சென்ற பெண், பார்வையற்ற நபரை பற்றிப் பிடித்து, அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார். இந்த சம்பவம் பார்ப்போரை நெகிழச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதனை ஒருவர் வீடியோ எடுத்த இணையத்தில் விட, லைக்கும் ஷேரும் புயல் வேகத்தில் இந்த வீடியோவுக்கு வந்துள்ளது. 

விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் சுப்ரியா. இந்த சம்பவம் திருவல்லா நகரில் நடந்திருக்கிறது. இதனை ஜோஷ்வா என்ற நபர்தான் பதிவு செய்து இணையத்தில் விட்டுள்ளார். இதைப் பதிவு செய்யும்போது சுப்ரியாவுக்கு எதுவும் தெரியாது.
 
.

தற்போது சுப்ரியாவை பலரும் பாராட்டி வருகின்றனர். போலீஸ் அதிகாரி விஜயகுமார் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு, உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் குறுகிய நேரத்தில் பல லட்சம் பார்வையை கடந்துள்ளது. 

சுப்ரியா 'ஜாலி' என்ற துணிக்கடையில் 3 ஆண்களாக பணியாற்றி வருகிறார். அவர் கடைக்கு வெளியே நின்றிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.