This Article is From Jul 22, 2019

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்திருக்கிறது. சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழையால் கேரளாவில் 4 முக்கிய அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன.

Thiruvananthapuram:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் 4 முக்கிய அணைகள் திறந்து விடப்பட்டதுடன், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழையால் அணைகளில் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலங்கரா அணை, எர்ணாக்குளத்தில் உள்ள புதத்தான்கேட்டு, கல்லார்குட்டி மற்றும் பம்பை ஆகிய அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. 

அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கண்ணூர், காசர்கோடு, கோட்டயத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ மற்றும் நிவாரண முகாம்களை அரசு அமைத்துள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 
 

.