This Article is From Aug 21, 2018

வெள்ளம் வடிந்த பின்னர் வீடு திரும்பிய குடும்பம்… காத்திருந்த ஷாக்!

கேரளாவில் வெள்ளம் வடிந்த பின்னர் நிவாரண பாதுகாப்பு முகாம்களில் இருந்து வீடு திரும்பிய குடும்பங்களுக்கு வெள்ள பாதிப்புகள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன

Chalakudi, Kerala:

கேரளாவில் வெள்ளம் வடிந்த பின்னர் நிவாரண பாதுகாப்பு முகாம்களில் இருந்து வீடு திரும்பிய குடும்பங்களுக்கு வெள்ள பாதிப்புகள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவின் சாலக்குடியச் சேர்ந்த சுரேஷ் ஜான் என்பவர் தன் வீட்டுக்குள் 10 அடி உயரத்துக்கும் மேல் வெள்ளம் சூழ்ந்ததால் இரண்டு மாடி வீட்டைவிட்டு தன் குடும்பத்துடன் நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்தார். வீட்டைவிட்டு வெளியேறும் போது தங்கள் வளர்ப்பு நாயை வீட்டிலேயே விட்டுச்செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ஆனால், தற்போது வீட்டுக்குத் திரும்பிய பின்னர் வளர்ப்பு நாய் பாதுகாப்பாக தப்பித்து உள்ளது அறியப்பட்டுள்ளது.

ka97343

இதுகுறித்து சுரேஷ் ஜான் கூறுகையில், “எனக்கு விவரிக்க வார்த்தைகளே இல்லை. மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். எல்லாவற்றையும் சரிசெய்து வீட்டை சரிசெய்ய நீண்டகாலம் ஆகும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. என் அம்மா இதைப் பார்த்தால் என்ன ஆவார் எனத் தெரியவில்லை” எனக் துயரப்படுகிறார்.

சுரேஷ் ஜானின் வீடு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பர்னிச்சர்கள், புத்தகங்கள், எல்லாம் அழிந்து தரை முழுவதும் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகின்றன.

656gr8ug

‘ஆரம்பத்தில் முதல் தளத்தில் சென்று தங்கிவிடலாம் என்றிருந்தோம். ஆனால் தண்ணீர் பெருகவே வளர்ப்பு நாயை மட்டும் மேல் தளத்தில் விட்டுவிட்டு நாங்கள் நிவாரண முகாமுக்குச் செல்லும் சூழல் வந்தது’ என்கிறார் மகள் எல்சா ஜான்.

இந்தப் பள்ளி மாணவி தன்னுடைய மற்றும் தன் சகோதரியின் அத்தனை புத்தககங்களும் காணமல் போயிவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

v3kh7so

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய மழை வெள்ளத்தால் பலர் மரணமடைந்து லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதுகாப்பு மீட்பு நடவடிக்கைகளும், ஹெலிகாப்டர் மீட்புகளும் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சாலைப் போக்குவரத்து சீரமைக்கப்படாததால் உணவு, உடை, மருந்து என அனைத்தும் ஹெலிகாப்டர்களிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

.