கேரளாவில் 7-ம் வகுப்பு மாணவி கர்ப்பம், ஆசிரியர் தலைமறைவு

மாணவியிடம் முழுமையாக விசாரித்த போது மாணவி தன்னை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார்.

கேரளாவில் 7-ம் வகுப்பு மாணவி கர்ப்பம், ஆசிரியர்  தலைமறைவு

இது குறித்து குடும்பத்திற்கு எதுவும் தெரியவில்லை

Malappuram:

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 12 வயது சிறுமி தனது பள்ளி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  7ஆம் வகுப்பு மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளார். ஆசிரியரை காணவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மாணவியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.  

“சுமார் இரண்டு மாதங்களாக  மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால், இது குறித்து குடும்பத்திற்கு எதுவும் தெரியவில்லை. மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சில பரிசோதனைகள் செய்த பின்னரே இந்த  கொடுமைகள் யாவும் தெரிய வந்துள்ளது.” என்று காவல்துறை அதிகாரி NDTVக்கு தெரிவித்தார்.

மாணவியிடம் முழுமையாக விசாரித்த போது மாணவி தன்னை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். தலைமறைவாகியுள்ள ஆசிரியர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.