This Article is From Mar 04, 2019

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் ராஜினாமா

சின்கோலி சட்டசபை தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 2 முறை சட்டமன்றத்திற்கு உமேஷ் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் ராஜினாமா

சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கும் உமேஷ் ஜாதவ்.

Bengaluru:

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக கர்நாடக காங்கிரசில் பிரச்னை நீடித்து வந்த நிலையில், இன்று அவர் இவ்வாறான முடிவை எடுத்திருக்கிறார். 

இன்று சபாநாயகரை சந்தித்த உமேஷ் யாதவ் அவரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரை துரோகி என்றும், பாஜகவிடம் ஏற்கனவே விலை போய் விட்டார் என்றும் காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர். 

உமேஷ் யாதவ் அளித்த ராஜினாமா கடிதத்தில், அதற்கான விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக சமீபத்தில்  செய்திகள் வெளியாகின. இந்த சிக்கல்கள் எதிலும், உமேஷ் யாதவ், நாகேந்திரா மற்றும் மகேஷ் கும்தலி ஆகியோர் தலையிடாமல் இருந்தனர். 

அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. உமேஷ் யாதவின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், '' உமேஷ் யாதவ் ஏற்கனவே பாஜகவிடம் விலை போய் விட்டார். சுய பிரச்னைகள் காரணமாக அவர் காங்கிரசை விட்டு வெளியேறியுள்ளார். அவர் ஒரு துரோகி'' என்று கூறியுள்ளார். 

உமேஷ் யாதவ் ராஜினாமா செய்வதால் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மெஜாரிட்டி ஏதும் பாதிப்பு ஏற்படாது. 

.