This Article is From Jan 08, 2020

ஜே.என்.யூவை எதிரியாக தேர்வு செய்து மத்திய அரசு தவறு செய்து விட்டது : கன்னையா குமார்

அரசு தவறு செய்து விட்டது. புத்திசாலித்தனமான எதிரியை தேர்ந்தெடுத்து விட்டது.

ஜே.என்.யூவை எதிரியாக தேர்வு செய்து மத்திய அரசு தவறு செய்து விட்டது : கன்னையா குமார்

கன்னையா குமார் ஜே.என்.யூவின் முன்னாள் மாணவ தலைவர்

New Delhi:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரான கன்னையா குமார் மற்றும் சிபிஐ (எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி உட்பட பலர் பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டினர். மத்திய அரசு அரசியலமைப்பை அழிக்க முயற்சிப்பதாக தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் உரையாற்றிய சீதாராம் யெச்சூரி மாணவர் சங்கத்தின் தலைவர் ஆயி கோஷூக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை கண்டித்தார். 

“நாங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம்.  தேச விரோதமாக அரசுதான் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய) பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

சிபிஐ தலைவரும்  ஜே.என்.யூ முன்னாள் தலைவருமான கன்னையா குமார், “ஜே.என்.யு புகாரளிக்கப்படாத பிரச்னைகளைப் பற்றி பேசுகிறது. அரசு தவறு செய்து விட்டது. புத்திசாலித்தனமான எதிரியை தேர்ந்தெடுத்து விட்டது. 

ஜே.என்.யூ மீதான வெறுப்பு என்பது பல்கலைகழகம் அல்லது சித்தாந்தத்தின் மீதான வெறுப்பு அல்ல. ஆனால், ஒரு நாடு எப்படி இருக்க வேண்டுமென என்ற சிந்தனை குறித்தது...

ஜே.என்.யூவில் ஒரு பெண் நூலகத்திலிருந்து வெளியேறி தனியாக நடக்க முடியும். இந்த வளாகத்தில் 40 சதவீத மக்கள் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஏழைக்குடும்பங்கள் என்று தெரிவித்தார்.

தன்னை துக்டே துக்டே (சிறு சிறு) கும்பலின் தலைவர் என்பதை மரியாதையாக எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

நீங்கள் ஜே.என்.யூவுடன் இருந்தால் நீங்கள் ஒரு இடதுசாரி என்று அழைக்கப்படுவீர்களென்று கூறினார்.

‘துக்டே துக்டே'என்ற வார்த்தை வலதுசாரி கட்சியினரால் எதிர்க்கட்சிகளை தாக்க பயன்படுத்தும் வார்த்தை. குறிப்பாக இடது மற்றும் இடது ஆதரவு அமைப்புகள் அவர்களை ஆதரிப்பவர்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை.

சிபிஐ (மார்க்சிய -லெனிய) தலைவரான கவிதா கிருஷ்ணன் ஜே.என்.யூவின் முன்னாள் மாணவர். அரசு பல்கலைக்கழகத்தின் மீது வன்முறையை ஏவியது என்று குற்றம் சாட்டினார்.

.