நோயாளி இறந்ததால் உறவினர்களால் சூறையாடப்பட்ட கொல்கத்தா மருத்துவமனை!

அக்தரி பேகம் என்ற 56 வயது பெண் வியாழக்கிழமை சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காலை பேகம் உயிரிழந்தார்

நோயாளி இறந்ததால் உறவினர்களால் சூறையாடப்பட்ட கொல்கத்தா மருத்துவமனை!

கோபமடைந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் வங்காளத்தின் கமர்ஹாத்தியில் உள்ள மருத்துவமனையை கொள்ளையடித்தனர்.

Kolkata:

நாடு முழுவதும் மக்களின் நலனுக்காக பாடுபடும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை பாதுகாக்கும் விதமாக, இவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு 15 கி.மீ தொலைவில் உள்ள கமர்ஹாட்டி பகுதியில் உள்ள சாகூர் தத்தா அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியை வெள்ளிக்கிழமை சிலர் அடித்து நொறுக்கினர்.

அக்தரி பேகம் என்ற 56 வயது பெண் வியாழக்கிழமை சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காலை பேகம் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த பேகத்தின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் சாகூர் தத்தா அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் அவசர வார்டினை அடித்து நொறுக்கினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பெல்கோரியா காவல் நிலையத்திலிருந்து, காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகளால் கருத்து தெரிவிக்க முடியவில்லை.