மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் வரவேற்பு!

புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் ஜிடிபியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் வரவேற்பு!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு கமல்ஹாசன் வரவேற்பு!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கல்விக் கொள்கை வரைவு 2020க்கு மத்திய அமைச்சரவை நேற்றை தினம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் பெயரை கல்வித்துறை என பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் கே.கஸ்தூரிரங்கன்  தலைமையிலான குழு கடந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு சமர்ப்பித்தது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த வரைவு பொது களத்தில் வைக்கப்பட்டது, மேலும் இது குறித்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் பெறப்பட்டன.

இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் கொள்கை வரைவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் கல்வி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டுள்ளது என மத்திய உயர் கல்வித்துறை செயலர் அமித் சுரே செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் ஜிடிபியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான ஒரு சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7 முதல் 8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.