This Article is From May 25, 2019

மக்களவை தேர்தலில் 3.72 % வாக்குகள் - மக்கள் நீதி மய்யத்தில் எதிர்காலம் எப்படி இருக்கும்?

மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டு 14 மாதங்களே ஆகியுள்ளது. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே கூட்டணி ஏதும் இன்றி கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கிறது.

மக்களவை தேர்தலில் 3.72 % வாக்குகள் - மக்கள் நீதி மய்யத்தில் எதிர்காலம் எப்படி இருக்கும்?

மக்கள் நீதி மய்யம் நீண்ட தூரம் பயணம் செல்லும் என்று கமல் தெரிவித்திருக்கிறார்.

Chennai:

மக்களவை தேர்தலில் 3.72 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி. நகரங்களில் குறிப்பிடத் தகும் வாக்குகளை பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கிராமப்புறங்களில் மக்களின் ஆதரவை பெற தவறி விட்டது. 

கோவையை பொறுத்தளவில் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கோவை தொகுதியில் போட்டியிட்டு 1.45 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். இது பதிவான வாக்குகளில் 11.6 சதவீதம் ஆகும். இதேபோன்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஸ்ரீதர் 1.35 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். இவர் திமுக தலைவர் டி.ஆர்.பாலுவை எதிர்த்து போட்டியிட்டு இந்த வாக்குகளை பெற்றுள்ளார். 

அதேநேரத்தில் கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களின் வரவேற்பு குறைவாக உள்ளதாகவே தெரிகிறது. தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் சம்பத் ராமதாஸ் 23, 477 வாக்குகள் மட்டுமே பெற்றார். கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளர் எபநேசர் மொத்தமே 8,590 வாக்குகளை பெற்றுள்ளார். 

இதுகுறித்து ராமதாஸ் கூறுகையில், 'நாங்கள் போஸ்டர், பேனர்களை இன்னும் கொஞ்சம் செலவு செய்து அமைத்திருந்தார் இன்னும் அதிக வாக்குகளை பெற்றிருப்போம்' என்று தெரிவித்தார். 

முன்னதாக நடிகராக இருந்த விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஆரம்பித்து கடந்த 2006-ல் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டார். அதில் அவருக்கு 8.4 சதவீத வாக்குகள் கிடைத்தது. பின்னர் 2011-ல் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். இதில் 7.9 சதவீத வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைத்தது. 

கமலின் மக்கள் நீதி மய்யம் நல்ல துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மயிலாப்பூரை சேர்ந்த காயத்ரி என்பவர் கூறுகையில், இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிப்பது என்பது  அறிவுப்பூர்வமாக தெரியவில்லை என்றார். பார்த்திபன் என்பவர் கூறுகையில், அனுபவமற்ற கமலுக்கு ஆதரவளித்து எனது வாக்கை நான் வீணடிக்கவில்லை என்றார்.

மெட்ராஸ் யூனிவர்சிட்டியின் அரசியல் அறிவியல் பிரிவு துறையின் தலைமையாளர் மணிவண்ணன் கூறுகையில், 'தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேமுதிகவின் தொடக்கத்தை, மக்கள் நீதி மய்யத்துடன் ஒப்பிட முடியாது. விஜயகாந்துக்கு கிராமப்புற மக்களின் ஆதரவு நன்றாக இருந்தது. கமல்ஹாசன் நகர்ப்புற மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். அடுத்து வரும் தேர்தல்களில் கமல்ஹாசன் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதற்கான வலிமை அவரிடம் இருக்கிறது' என்றார். 

இளம் வாக்காளர் வருண் என்பவர் கூறுகையில், 'மக்கள் தங்களது திராவிட கட்சிகளை தவிர்த்து மற்றவர்களை விரும்பவில்லை. கூட்டணி வைத்தால் மட்டுமே கமலுக்கு பலன் கிடைக்கும். மக்கள் புதியவர்கள் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை' என்றார். 

.