This Article is From Jan 08, 2019

விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமானது! - முதல்வர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமானது! - முதல்வர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சட்டமன்ற கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரையாற்றினார், அப்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு ஆகியோரின் கோரிக்கையேற்று, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார்.

விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அத்துடன் அந்த மாவட்டத்திற்கு ஆட்சியர் தனியாக நியமிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தமிழத்தை பொருத்தவரையில் மாவட்டங்களில் அதிக ஊராட்சி ஒன்றியங்களை கொண்டதில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில், 33ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போதே இது போன்ற தனிமாவட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. 12 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு பெரிய மாவட்டமாக இருக்கிறது. குறிப்பாக, கள்ளக்குறிச்சியில் இருப்போர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு வருவதென்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுடிய நிலை இருந்தது.

இந்நிலையில் இந்த நிலையை எளிதாக்கவும், நிர்வாக வசதிகளுக்காகவும் தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிசமமாக மாவட்டத்திற்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் பிரிய உள்ளது.


 

.