This Article is From Jul 03, 2019

நீரிழிவு நோயை எளிதில் கையாளலாம்!!

 ஓட்ஸ், ஆரஞ்சு, சூக்கினி, பருப்புகள், ஆப்ரிகாட் போன்ற உணவுகளில் க்ளைசமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  

நீரிழிவு நோயை எளிதில் கையாளலாம்!!

ஹைலைட்ஸ்

  • கீரைச்சாறு குடிப்பதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
  • ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றினால் நீரிழிவு நோய் உண்டாகாது.
  • ஓட்ஸ், ஆரஞ்சு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை காய்கறிகளும், கீரைகளும் சிறந்த உணவுகள்.  டைப் 2 நீரிழிவு நோயின் விளைவாக உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாகவோ அல்லது சுரக்காமலோ இருக்கும்.  அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம், சோர்வு, கண் பார்வை குறைபாடு, பாதங்கள் மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இருதய ஆரோக்கியம் போன்றவை தொடர்ச்சியாக பாதிக்கப்படும்.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டால் மட்டுமே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  

சரியான உடற்பயிற்சி, ஆழ்ந்த உறக்கம், மன அழுத்தமின்மை போன்றயால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.   குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான விகிதத்தில் எடுத்து கொண்டால் இரத்த அழுத்தம் சீராகும்.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகளை பார்ப்போம். 

2o7dnj2o

உணவு: 
மரக்கோதுமை, கீரைகள், ப்ரோக்கோலி, பரட்டைக்கீரை, பட்டை, கிராம்பு, வெண்டைக்காய், வெந்தயம், மஞ்சள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். 

உடல் எடை: 
நீரிழிவு நோய் இருப்பதை கண்டறிந்த பின் உடல் எடை குறைப்பது நல்லது.  துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது.  

உறக்கம்: 
நீண்ட நேரம் ஆழ்ந்து உறங்குவதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறது.  தூக்கம் போதுமான அளவு இல்லையென்றால், பசியுணர்வு இருந்து கொண்டே இருக்கும்.  இதன் விளைவாக, துரித உணவுகளை சாப்பிட துவங்குவோம்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.  

 

q89v0m5o

 

வாழ்வியல் முறை: 
தினசரி மாலை 7 - 8 மணிக்குள் இரவு உணவை முடிக்க பழகுங்கள்.  வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்கலாம்.  இதனால் உடல் புத்துணர்ச்சியடைகிறது.  முழுநாள் அல்லது ஒருநேரம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.  இதனால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.  

க்ளைசமிக் இண்டெக்ஸ்: 
க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளையே நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டும்.  ஓட்ஸ், ஆரஞ்சு, சூக்கினி, பருப்புகள், ஆப்ரிகாட் போன்ற உணவுகளில் க்ளைசமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  

.