கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு நாள்: திமுக சார்பில் அமைதிப் பேரணி!

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து, 8ம் தேதி அவரது உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு நாள்: திமுக சார்பில் அமைதிப் பேரணி!

Kalaignar Karunanidhi: கலைஞரின் முதல் நாள் நினைவு தினம் ஆகஸ்ட் 7ம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது.

Kalaignar Karunanidhi Death Anniversary: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, திமுக (DMK) சார்பில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி தொடங்கியது. 

திமுக தலைவர் கலைஞர் 50 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார். தமிழக முதல்வராக 5 முறை பதவியேற்றுள்ளார். மேலும் தான் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, எந்த தலைவர்களாலும் முறியடிக்க முடியாத வரலாற்று சாதனை படைத்தவர். 

அப்படிப்பட்ட, தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கலைஞர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து, 8ம் தேதி அவரது உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கலைஞரின் முதல் நாள் நினைவு தினம் ஆகஸ்ட் 7ம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.

இதில், கனிமொழி, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதேசாலை வழியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பேரணி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு சிலையை திறந்துவைக்கிறார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.