This Article is From Nov 19, 2018

தெலங்கானாவில் தேர்தல் வரவுள்ள நிலையில் ‘யாகப் பூஜை’ செய்த முதல்வர்..!

கடந்த வாரம், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் சந்திரசேகர ராவ், கோயிலில் பூஜை செய்தார். அதன் பின்னர் தான் தேர்தல் அதிகாரியிடம் மனுவை சமர்பித்தார்.

தெலங்கானாவில் தேர்தல் வரவுள்ள நிலையில் ‘யாகப் பூஜை’ செய்த முதல்வர்..!

சித்திப்பெட்டில் இருக்கும் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் தான் இந்த யாகம் நடந்தது

Hyderabad:

அடுத்த மாதம் 7 ஆம் தேதி, தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அவரது பண்ணை வீட்டில் மிகப் பெரிய யாகப் பூஜையை நடத்தியுள்ளார். 

சித்திப்பெட்டில் இருக்கும் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் தான் இந்த யாகம் நடந்தது. இது குறித்து முதல்வர் அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கையில், ‘சந்திரசேகர் ராவ், அவரது குடும்பத்தினருடன் ‘ராஜ சியாமள யாகம்' மற்றும் ‘சந்தி யாகம்' உள்ளிட்டவையை செய்தார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6n8imetg

மாநிலத்தின் நலனிற்காகவும், மக்களின் நலனிற்காகவும் யாகம் செய்யப்பட்டது

இன்று காலை 11:11 மணியளவில் யாகத்தின் நிறைவுப் பகுதியான ‘பூர்ணஹுதி' அரங்கேற்றப்பட்டது. 

flplnkdg

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சந்திரசேகர் ராவின் யாகம் கவனம் பெற்றுள்ளது..

அறிக்கையில் மேலும், ‘மாநிலத்தின் நலனிற்காகவும், மக்களின் நலனிற்காகவும், வளர்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காகவும் தான் இந்த யாகம் செய்யப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

qcjikq3o

வரும் 7 ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடைபெறும்

கடந்த வாரம், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் சந்திரசேகர ராவ், கோயிலில் பூஜை செய்தார். அதன் பின்னர் தான் தேர்தல் அதிகாரியிடம் மனுவை சமர்பித்தார்.

.