நீதிபதி ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு!

நீதிபதி ரஞ்சன் கோகாய் (Justice Ranjan Gogoi), உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

Justice Ranjan Gogoi: வட கிழக்கு மாநிலங்களிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கு முதல் நபர் ரஞ்சன் கோகாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது

New Delhi:

நீதிபதி ரஞ்சன் கோகாய் (Justice Ranjan Gogoi), உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

வட கிழக்கு மாநிலங்களிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கு முதல் நபர் ரஞ்சன் கோகாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், 13 மாதங்கள் இந்தப் பதவியில் இருப்பார். நவம்பர் 17, 2019 உடன் அவர் ஓய்வு பெறுவார். 

நீதிபதி கோகாய், மிகவும் மென்மையாக பேசக்கூடியவராகவும், அதே நேரத்தில் பணியில் கடுமையாக நடந்து கொள்பவராகவும் அறியப்படுபவர். கடந்த ஜனவரி மாதம், உச்ச நீதிமன்றத்தின் 4 தலைமை நீதிபதிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பைக் கூட்டினர். அதில் அவர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை விமர்சனம் செய்தனர். செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய 4 நீதிபதிகளில் கோகாயவும் ஒருவர் ஆவார். 

1978 ஆம் ஆண்டு, கோகாய், வழக்கறிஞராக பணி செய்ய ஆரம்பித்தார். பிப்ரவரி 28, 2001-ல் அவர் குவாத்தி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 9, 2010-ல் அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்துக்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். 

பிப்ரவரி 12, 2001-ல், அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். ஏப்ரல் 23, 2012-ல், அவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.