"அவமானம்" என்கிற கோஷங்களுக்கு மத்தியில் எம்.பி ஆக பதவியேற்றுக்கொண்டார் ரஞ்சன் கோகோய்

மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நியமன உறுப்பினர் பதவி அளிக்கப்படுவது வழக்கம்.

நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவையில் நியமிக்கப்பட்டதை காங்கிரஸ் விமர்சித்தது

New Delhi:

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பது குறித்த அறிவிப்பாணையை ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதில், அரசியல் சாசன சட்டத்தின் 80-ஆவது சட்டப் பிரிவின்படி, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகோயை குடியரசுத் தலைவர் நியமித்திருந்தார். ஏற்கெனவே இருந்த நியமன உறுப்பினர் ஒருவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த நியமனம் நடைபெறுகிறது.

மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நியமன உறுப்பினர் பதவி அளிக்கப்படுவது வழக்கம்.

குடியரசு தலைவரின் இந்த நியமனம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று விமர்சித்து காங்கிரஸ் உறுப்பினர்களின் "அவமானம்" கோஷங்களை எழுப்பினர். இந்த கோஷங்களுக்கு மத்தியில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் நாட்டின் உயர் நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், நாடாளுமன்றத்தில் "சட்டம் இயற்றும் துறைக்கு முன்பாக நீதித்துறையின் கருத்துக்களை முன்வைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்று கூறி மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

"சட்டம் இயற்றும் துறையும், நீதித்துறையும் ஒரு கட்டத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருப்பதால் நான் அதை ஏற்றுக்கொண்டேன். நாடாளுமன்றத்தில் எனது இருப்பானது நீதித்துறையின் கருத்துக்களைச் சட்டம் இயற்றும் துறைக்கு முன்பாக முன்வைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்."அவர் முன்னதாக கூறியிருந்தார்.

நீதிபதி கோகோயின் நியமனம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் மீதான "தீவிரமான, முன் எப்போதும் இல்லாத மற்றும் மன்னிக்க முடியாத தாக்குதல்" என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

"எங்கள் அரசியலமைப்பு நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் அதிகாரங்களைப் பிரிப்பதை அடிப்படையாகக் கொண்டது. நீதித்துறையானது நம்பிக்கையை புரிந்துகொள்வதில் செழித்து வளர்கிறது. " என்று காங்கிரசின் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தனது முன்னாள் நண்பரான கோகோயை விமர்சித்துள்ளார், அவரது முடிவு நீதித்துறையின் சுதந்திரம் குறித்த சாமானிய மக்களின் நம்பிக்கையை எதிர்மறையாகப் பாதிக்கும் என்று ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் எங்கள் கடனை தேசத்திற்குச் செலுத்தியிருக்கின்றோம்' என்பது நீதிபதி ரஞ்சன் கோகோய், நாங்கள் மூவரும் 2018 ஜனவரி 12 அன்று அளித்த அறிக்கையின் வாயிலாக நிருப்பித்திருந்தோம். ஒரு காலத்தில் அத்தகைய தைரியத்தை நிலைநாட்ட நீதிபதி ரஞ்சன் கோகோய் குறித்து நான் ஆச்சரியப்பட்டேன். 

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை பற்றிய உன்னதமான கொள்கைகளைச் சமரசம் செய்துகொள்ள முடியாது "என்று நீதிபதி ஜோசப் கூறியுள்ளார்.

"நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில் இருப்பதால் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது" என்று குற்றம் சாட்டி, ஜனவரி 12, 2018 அன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அப்போதைய நீதிபதி கோகோயுடன் நீதிபதி ஜோசப் நான்கு நீதிபதிகளில் ஒருவராக இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.