This Article is From Jan 06, 2020

JNU  துணைவேந்தர் ஒரு கோழை : மாணவர் சங்க அறிக்கை

“ துணைவேந்தர் ஒரு கோழை பின்பக்கம் வழியே சட்டவிரோதங்களை அனுமதிக்கிறார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடிச்செல்கிறார். ஜே.என்.யூவை அழிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்” என்று ஜே.என்.யூவின் மாணவர் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

JNU  துணைவேந்தர் ஒரு கோழை : மாணவர் சங்க அறிக்கை

மாணவர் சங்கம் துணைவேந்தர் ஜகதீஷ்ஷ் குமாரை பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளது

New Delhi:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த வன்முறையின் பின்ணனியில் துணைவேந்தர் மமிதலா ஜகதீஷ் குமார் இருப்பதாகவும் அவர் பதவி விலக வேண்டும் என்று ஜே.என்.யூ மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை மாலை ஜே.என்.யூவின் மாணவர் தலைவர் ஆயி கோஷ் உட்பட பல்கலைக்கழகத்தின் 18க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முகமூடி அணிந்த கும்பல் ஜே.என்.யூவுக்குள் நுழைந்து மாணவர்களையும் பேராசிரியர்களையும் பிரம்பாலும் இரும்புக் கம்பியாலும் தாக்கியது. 

“ துணைவேந்தர் ஒரு கோழை பின்பக்கம் வழியே சட்டவிரோதங்களை அனுமதிக்கிறார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடிச்செல்கிறார். ஜே.என்.யூவை அழிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்” என்று ஜே.என்.யூவின் மாணவர் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 

“கிட்டத்தட்ட 70 நாட்களாக ஜே.என்.யூ மாணவர்கள் தனியார்மயமாக்கல் மற்றும் பேராசை ஆகியவற்றின் பிடியிலிருந்து காப்பாற்ற துணிச்சல் மிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜே.என்.யூவில் கட்டண உயர்வினை செய்தியாக அனுப்புகிறார். அனைத்து மாணவர்களுக்கும் கட்டண உயர்வு சாத்தியமானதாக உள்ளது என்பதை துணைவேந்தரால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது” என்று கூறியது. 

நடந்த வன்முறைக்கு துணைவேந்தரே பொறுப்பு என்று மாணவர் சங்கம் கூறியுள்ளது. 

“மாணவர்கள் மீது வன்முறை பிரயோகிப்பதற்கும் பல்கலைக்கழகத்தை அழிப்பதற்கும் உதவியாளர்களை பயன்படுத்துகிறார்” என்று ஜே.என்.யூ மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.