This Article is From Aug 13, 2018

டெல்லியில் ஜே.என்.யூ மாணவர் மீது துப்பாக்கிசூடு..!

உமர் காலித் கடந்த ஜூன் மாதம் காவல் துறையிடம் ஒரு புகார் தெரிவித்திருந்தார். அதில், ‘என் உயிரிக்கு ஆபத்து இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்

New Delhi:

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் உமர் காலித் மீது, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகே துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இதில் உமர் அதிர்ஷ்டவசாம உயிர்பிழைத்துள்ளார் என்று போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கிசூடு சம்பவம் நடந்த இடத்தில், மிக அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு இருந்ததாக கூறப்படுகிறது. 

நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகேயிள்ள கான்ஸ்டிடியூஷன் க்ளபுக்கு, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார் உமர். துப்பாக்கிசூடு சம்பவத்தை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உமர், ‘நாடு முழுவதும் ஒரு அச்ச உணர்வு விதைக்கப்பட்டுள்ளது. யார் அரசுக்கு எதிராக பேசினாலும் அச்சுறுத்தப்படுகின்றனர்’ என்று கூறினார். 

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், ‘நாங்கள் ஒரு டீ கடையில் இருந்தோம். அப்போது, எங்களை நோக்கி வெள்ளை நிற உடை அணிந்து வந்த நபர், திடீரென்று துப்பாக்கியை எடுத்து, உமர் மீது சுட ஆரம்பித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உமர் காலித், நிலை தடுமாறினார். இதனால், குண்டு அவர் மீது தாக்காமல் விலகியது. துப்பாக்கி சூடு நடத்திய நபரைப் பிடிக்க முயன்றோம். ஆனால், அவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடியே ஓடினார். அப்போது அவர் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது’ என்று பரபரப்பாக தகவல் தெரிவித்துள்ளார். 

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளரும் மாணவியுமான ஷீலா ரஷீத், ‘இது மிகவும் அதிரச்சியளிப்பதாக இருக்கிறது. மிகவும் கண்டனத்துக்குரியதாகும். உமரிடம் பேசினேன். அவர் இப்போது பத்திரமாக இருக்கிறார். ஆனால், அவரின் பாதுகாப்பு குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது’ என்று அச்சம் தெரிவித்துள்ளார். 

உமர் காலித் கடந்த ஜூன் மாதம் காவல் துறையிடம் ஒரு புகார் தெரிவித்திருந்தார். அதில், ‘என் உயிரிக்கு ஆபத்து இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.  
 

.