JNU வளாகத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பலில் ஒருவர்.
New Delhi: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் நேற்று மாலை முகமூடி அணிந்து இரும்பு கம்பிகள் மற்றும் கற்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது. அப்போது எடுக்கப்பட்ட மொபைல் போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுதமேந்திய கும்பலினால் பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கப்பட்டனர். காயம்பட்டவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. முகமூடி அணிந்தவர்கள் விடுதியின் அறைக்கு சென்று கொடூரமாக தாக்கினர். ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தியதாகவும் இதனை காவல்துறை தடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காயமடைந்த 30 பேரில் 12 பேர் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ் தாக்கப்பட்டுள்ளார். மாணவர்களை இருண்ட ஹாலில் ஒன்றுகூடுமாறு குரல் ஒலித்தபடி வீடியோ தொடங்குகிறது.
கேமரா நடை பாதையை காட்டுகிறது. விரைவில் ஒரு மனிதன் தடியை எடுத்துக் கொண்டு ஓடுவதைக் காணலாம். இதற்கு மத்தியில் குரல் ஒன்று ஒலிக்கிறது. “இந்த பெண் தான் இவள் ஜே.என்.யூ மாணவி என்று சொன்னால், ஆனால் அவள் பல்கலைகழத்தை சார்ந்தவள் இல்லை. நீ யார்?” தொடர்ந்து அலறல் சத்தமும் இரும்பு கம்பிகள் மற்றும் மூங்கில் தடிகளைக் கொண்டு முகமூடி அணிந்த ஒரு குழு ஹாலைத் தாண்டி வருகிறார்கள்.
அவர்களில் இருவரில் ஒருவர் கறுப்பு சட்டையும் மற்றொருவர் கோடு போட்ட சட்டையும் அணிந்து மாணவர்களை தாக்கிய ஆயுதங்களுடன் அச்சுறுத்தி சைகை செய்தனர். முகமூடி அணிந்த கும்பலை எதிர்த்து நிற்கும் மாணவர்கள் “நீங்கள் யாரை பயமுறுத்த முயற்சிக்கிறீர்கள்? முயற்சி செய்து எங்களை தொடு” என்று ஒருவர் கத்துகிறார்கள்.
தொடர்ந்து அலறல் சத்தமும் குழப்பமும் நிலவுகிறது. கண்ணாடி உடைந்து சிதறும் சத்தமும் கேட்கிறது. “ஏபிவிபி திரும்பிச் செல்” என்ற சத்தமும் திரும்ப கேட்கிறது. காவல்துறை தலையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். தாக்குதலுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக ஆளும் மத்திய அரசினை குற்றம் சாட்டினார்.