
"செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக் கொள்கிறேன்"
ஹைலைட்ஸ்
- கமல், கடந்த 2 வாரங்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்
- கொரோனாவுக்கு முன்னெச்சரிக்கையாக கமல், தானாக நடவடிக்கை எடுத்தார்
- தொடர்ந்து, கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை அவர் வெளியிடுகிறார்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பதால் தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டார் என்று தகவல்கள் வந்தன. தற்போது அதை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் கமல்.
சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் கமல், முன்னர் தங்கியிருந்த வீடு இருந்தது. அந்த வீட்டை, கட்சி ஆரம்பித்த பின்னர், கட்சி அலுவலகமாக மாற்றினார். அங்குதான், ‘கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற சுவரொட்டியை சென்னை மாநகராட்சி ஒட்டியுள்ளது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதனால், கமலுக்குதான் கொரோனா பாதிப்பு வந்துவிட்டது என்று பேசப்பட்டது.
தற்போது அது குறித்து கமல், “உங்கள் அனைவரின் அப்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சொரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.
Press Release regarding notice stuck at party headquarters.#MakkalNeedhiMaiampic.twitter.com/cbLkDf9ULz
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 28, 2020
ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்படதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக் கொள்கிறேன்,” என அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.