This Article is From Jan 11, 2020

’உக்ரேன் விமானத்தை வீழ்த்தியது எங்கள் ஏவுகணைதான்’: ஈரான் ஒப்புதல்!

உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே என்றும் தாக்குதலுக்கு மனித தவறே காரணம் என்று கூறியுள்ளது.

’உக்ரேன் விமானத்தை வீழ்த்தியது எங்கள் ஏவுகணைதான்’: ஈரான் ஒப்புதல்!

இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர். (File)

Dubai:


ஈரானில் இந்த வார தொடக்கத்தில் ராணுவ தளத்திற்கு அருகே சென்ற உக்ரேன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கு தாங்களே காரணம் என ஈரான் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. 

இதுதொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே என்றும் தாக்குதலுக்கு மனித தவறே காரணம் என்று கூறியுள்ளது. 

இரான் வெளியுரவுத்துறை அமைச்சர் ஜாவாத் செரீஃப் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, "அமெரிக்க சாகசத்தால் ஏற்பட்ட நெருக்கடியின் போது ஏற்பட்ட மனித பிழை பேரழிவிற்கு வழிவகுத்தது" என்று அவர் கூறியுள்ளார்.
 


இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரானிய ராணுவம் இரங்கல்கள் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் விமானம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், அதனை தொடக்கத்தில் ஈரான் மறுத்து வந்தது. 
 

.