This Article is From Sep 07, 2018

ரெட் கார்னராலும் பயனில்லை- கடன் வாங்கிவிட்டு சுதந்திரமாக சுற்றும் மொஹுல் சோக்ஸி

சோக்ஸி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார். ஆகையால் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து நாடு கடத்துவதில் சிரமம் நிலவுகிறது.

New Delhi:

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடந்த 13,500 கோடி ரூபாய் மோசடியில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளி மொஹுல் சோக்ஸிக்கு, ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியும், இந்தியாவுக்கு கொண்டு வரவும் முடியாமல் போய்விடுமோ என்று சி.பி.ஐ அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

அவரது உறவினர் நீரவ் மோடி போல அல்லாமல், சோக்ஸி தெளிவாக திட்டம் தீட்டி தப்பித்திருப்பதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் என இன்டர்போலிடம் சி.பி.ஐ கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால், சோக்ஸி தன் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம், அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டவை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவதை இன்டர்போல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், இந்திய சிறைகளின் நிலைமை, தனது உயிருக்கான பாதுகாப்பு பற்றி சோக்ஸி கேள்வி எழுப்பியுள்ளார்.

5 நபர் இன்டர்போல் கமிட்டி அடுத்த மாதம் விசாரணை நடத்தி, ரெட் கார்னர் வழங்குவது பற்றி முடிவெடுக்க இருக்கிறது.

நீர்வ மோடி ஐக்கிய நாடுகளில் பதுங்கி இருப்பதால், அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் சோக்ஸி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் குடியுரிமையை ஜனவரி மாதம் பெற்றுள்ளார். ஆகையால் அவரை ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து நாடு கடத்துவதில் சிரமம் நிலவுகிறது.

.