மகளிருக்கான ஸ்குவாஷ் இறுதி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்

15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. மொத்தம், 68 பதக்கங்களுடன் இந்தியா 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மகளிருக்கான ஸ்குவாஷ் இறுதி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 14வது நாளான இன்று, மகளிருக்கான ஸ்குவாஷ் இறுதி போட்டி நடைப்பெற்றது

இதில், இந்தியா - ஹாங்காங் ஆகிய அணிகள் மோதின. இந்திய அணியில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சுனன்யா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 2-0 என்ற கணக்கில் ஹாங்காங் அணி வெற்றிப் பெற்றது. இதனால், தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.

இதுவரையில், 15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. மொத்தம், 68 பதக்கங்களுடன் இந்தியா 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................