‘ராணுவத்தில் கமாண்டோ பிரிவு 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்’ – முப்படை தலைமை தளபதி!!

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் செயல்பட்டு வருகிறார். தான் பொறுப்பேற்றதற்கு பின்னர் ராணுவத்தில் கமாண்டோ பிரிவை தொடங்குவது தொடர்பாக முப்படை தளபதிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

‘ராணுவத்தில் கமாண்டோ பிரிவு 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்’ – முப்படை தலைமை தளபதி!!

ராணுவத்தில் கமாண்டோ பிரிவை தொடங்குவது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

New Delhi:

இந்திய ராணுவத்தில் முப்படைகளின் ஆபரேஷன்களை ஒருங்கிணைக்கும் வகையில் ராணுவ கமாண்டோ பிரிவு 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும் என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.  இது இந்திய ராணுவ வரலாற்றில் மிகப்பெரும் சீர் திருத்தம் என்றும் அவர் கூறயிள்ளார்.

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் செயல்பட்டு வருகிறார். தான் பொறுப்பேற்றதற்கு பின்னர் ராணுவத்தில் கமாண்டோ பிரிவை தொடங்குவது தொடர்பாக முப்படை தளபதிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘முப்படைகளின் வலிமையை அதிகரிப்பதுதான் எனது இலக்கு. புதிதாக ஏற்படுத்தப்படும் ராணுவ கமாண்டோ பிரிவு முப்படை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும். தளவாடங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், படைப்பிரிவை அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்' என்று தெரிவித்தார்.

ராணுவ கமாண்டோ பிரிவில் எத்தனை வீரர்கள் இருப்பார்கள் என்பது குறித்து இறுதி செய்யப்படவில்லை.

இந்திய ராணுவத்தில் வடக்கு மண்டல படைப்பிரிவு லடாக் முதல் நேபாளம் வரையிலும், ஜம்மு காஷ்மீருக்கென தனி படைப்பிரிவும் செயல்பட்டு வருகிறது.

பாகிஸ்தான், சீன எல்லைகளை பாதுகாக்கும் படைப்பிரிவு, கடல் எல்லைகளை பாதுகாக்கும் கப்பற்படை தலைமையிலான படைப்பிரிவு, பல்வேறு  ஆபரேஷன்களில் ஈடுபடும் வான்படை உள்ளிட்ட படைப்பிரிவுகளை இந்திய ராணுவம் கொண்டுள்ளது.

கமாண்டோவைப் போன்று வெடி பொருட்கள் விஷயத்திலும் ராணுவம் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே வெடி பொருட்கள் தயாரிக்கப்படவுள்ளது என்று பிபின் ராவத் கூறியுள்ளார். ‘வெடி பொருட்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என்று இருந்தால், நாம் 20 ஆண்டுகளுக்கு வெடி பொருட்களை நிலுவையில் வைத்திருக்க வேண்டும்' என்று கூறினார்.