This Article is From Jun 13, 2018

இந்தியாவுக்கு ராணுவ ஹெலிகாப்ட்டர்களை விற்க உள்ளது அமெரிக்கா!

இந்திய ராணுவத்துக்கு தனது நாட்டு ஹெலிகாப்ட்டர்களை விற்க உள்ளது அமெரிக்க அரசு.

இந்தியாவுக்கு ராணுவ ஹெலிகாப்ட்டர்களை விற்க உள்ளது அமெரிக்கா!

ஹைலைட்ஸ்

  • இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் அதிகரிக்கும் எனப்படுபகிறது
  • 6 ஹெலிகாப்ட்டர்கள் விற்கப்பட உள்ளன
  • 930 மில்லியன் டாலர்கள் இந்த ஹெலிகாப்ட்டர்களை வாங்க செலவாகும்
Washington:

இந்திய ராணுவத்துக்கு தனது நாட்டு ஹெலிகாப்ட்டர்களை விற்க உள்ளது அமெரிக்க அரசு.

மொத்தமாக 6, AH-64E அபாச்சே ஹெலிகாப்ட்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க அரசின் அனுமதியை அடுத்து இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வாங்க அமெரிக்க காங்கிரஸுக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. காங்கிரஸ் எந்த ஆட்சேபணையையும் தெரிவிக்காத நிலையில், சீக்கிரமே இந்த ஃபைட்டர் ஹெலிகாப்பட்டர்கள் இந்திய ராணுவப் படையில் சேரும். இந்த டீலின் மொத்த மதிப்பு 930 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 

இது ஒரு புறமிருக்க போயிங் நிறுவனமும் டாடா மோட்டார்ஸும் இந்தியாவிலேயே ராணுவ ஹெலிகாப்ட்டர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சீக்கரமே இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெலிகாப்ட்டர்களும் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. 

இந்த விற்கப்படும் டீல் குறித்து அமெரிக்க தரப்பு, 'நிலத்தில் எதிரிகளை எதிக் கொள்ள இந்த ஹெலிகாப்ட்டர்கள் அதிக ஆற்றலை இந்திய ராணுவத்துக்குக் கொடுக்கும். அதே நேரத்தில், இந்த புதிய ஹெலிகாப்ட்டர்களை இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதில் எந்த சிரமும் இருக்காது' என்று தெரிவித்துள்ளது. 

.