This Article is From Feb 28, 2020

தண்ணீர், மின்சாரம் விநியோகம் உள்பட மியான்மருடன் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

இந்தியா - மியான்மர் இடையிலான ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர் அதிபர் யு வின் மின்ட் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

தண்ணீர், மின்சாரம் விநியோகம் உள்பட மியான்மருடன் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

பிரமதமர் நரேந்திர மோடியுடன் மியான்மர் அதிபர் யு வின் மின்ட்.

ஹைலைட்ஸ்

  • மியான்மர் அதிபர் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்
  • ஒப்பந்தப்படி மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இந்தியா பணிகளை செய்யும்
  • மியான்மரில் இந்தியா சாலைகளை ஏற்படுத்தி தரவுள்ளது
New Delhi:

தண்ணீர், மின்சார விநியோகம், சாலையை ஏற்படுத்துதல், சூரிய மின் உற்பத்தி உள்பட 10 ஒப்பந்தங்கள் இந்தியா - மியான்மர் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மியான்ரின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்படுத்தப்படவுள்ளன. 

இந்தியா - மியான்மர் இடையிலான ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர் அதிபர்  யு வின் மின்ட் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

மியான்மரில் ஏற்பட்டுள்ள கலகத்தால் ராக்கைன் மாநில மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய இந்தியா பொறுப்பு ஏற்றுக் கொண்டது. இதன்படி, கடந்த மாதம் நூடுல்ஸ், உளுத்தம் பருப்பு, சோயா எண்ணெய், மிளகாய்ப்பொடி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

இதுதொடர்பாக கடந்த 2017-ல் இந்தியா - மியான்மர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இந்தியா மியான்மருக்கு உதவி செய்கிறது. 

ஆட்கடத்தலை தடுப்பது, மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாகவும் இரு நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 

மரக்கட்டைகள் கடத்தப்படுதல், புலிகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு, தொலைத் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட ஒப்பந்தம் செய்திருந்தன. 

மியான் அதிபர் யு வின் தனது மனைவி டா சோசோவுடன் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

யு வின்,  பிரதமர் நரேந்திர மோடியை அவரது ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதேபோன்று வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கரையும் மியான்மர் அதிபர் சந்தித்துப் பேசினார்.

இன்று மாலை குடியரசுத் தலைவரை மியான் அதிபர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். 

தனது பயணத்தில் புத்தர்களின் புனித நகரமான புத்த கயாவுக்கு மியான்மர் அதிபர் செல்லவுள்ளார். சனிக்கிழமை அவர் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கிறார். 

.