This Article is From Jun 22, 2020

லடாக் எல்லைப் பகுதியில் ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி! மோதலைத் தொடர்ந்து புதிய விதிமுறை!!

இந்த நிலையில் இந்திய-சீன எல்லைப்பகுதியில் 1996 மற்றும் 2005 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள்படி இரு தரப்பினரும் எல்.ஏ.சி Line of Actual Control) பகுதியில் இரண்டு கிலோமீட்டருக்குள் வெடிக்கும் வெடிபொருட்களையோ அல்லது துப்பாக்கிகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

லடாக் எல்லைப் பகுதியில் ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி! மோதலைத் தொடர்ந்து புதிய விதிமுறை!!

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் நாட்டிற்காக இறந்தனர்

ஹைலைட்ஸ்

  • எல்.ஏ.சி பகுதியில்வெடிபொருட்களையோ துப்பாக்கிகளையோ பயன்படுத்த வேண்டாம்
  • 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
  • மோதலைத் தொடர்ந்து புதிய விதிமுறை
New Delhi:

சமீபத்தில் கிழக்கு லடாக் பகுதியில் நடந்த இந்திய-சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 76 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் இந்திய சீன எல்லையில்  1975-ம் ஆண்டில், அருணாச்சல பிரதேசத்தில் துலுனுக் லா பாஸில் நான்கு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் வழக்கமான ரோந்துப் பயணத்தில் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் 45 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படும் உயிரிழப்பு சம்பவம் இதுவேயாகும்.

தற்போதைய சம்பவமானது ரோந்து புள்ளி 14 க்கு அருகிலுள்ள இடத்தில் நடந்துள்ளது. இந்த மோதலில் எத்தனை சீன வீரர்கள் உயிரிழந்தனர் அல்லது, காயமடைந்தனர் என்கிற தகவலை சீன அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அமெரிக்க உளவுத்துறையின் தகவல் மற்றும் தகவல்கள் இடைமறிப்புகள் அடிப்படையில் சீன வீரர்கள் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்திய-சீன எல்லைப்பகுதியில் 1996 மற்றும் 2005 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள்படி இரு தரப்பினரும் எல்.ஏ.சி Line of Actual Control) பகுதியில் இரண்டு கிலோமீட்டருக்குள் வெடிக்கும் வெடிபொருட்களையோ அல்லது துப்பாக்கிகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

சமீபத்திய மோதலைத் தொடர்ந்து தற்போது இந்தியா இந்த விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய விதிப்படி சூழ்நிலைகளுக்கு ஏற்ப துப்பாக்கிகளை பயன்படுத்த படைத்தளபதிகளுக்கு இந்திய ராணுவம் அதிகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை சமாளிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனக்கூறியதைத் தொடர்ந்து இந்த புதிய விதிமுறைகளை ராணுவம் வகுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இந்த மோதல் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இரு முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்தார். தென்னிந்திய திரை கலைஞரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உட்பட மத்திய அரசினை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.