This Article is From Apr 16, 2019

கனிமொழியின் தூத்துக்குடி இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!!

வேலூரில் மக்களவை தேர்தல் ரத்தாகியுள்ள நிலையில் கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது.

கனிமொழியின் தூத்துக்குடி இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!!

இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 500 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்கும் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கும் இடையே நேரடி போட்டி காணப்படுகிறது.

தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஓய்ந்த நிலையில், அதன் பின்னர் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடிரசு தலைவர் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து வேலூரில் தேர்தல் ரத்தாகி இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் இருக்கும் கனிமொழியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 500 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ரூ. 205 கோடி ரொக்கப்பணம். மற்றவை நகைகள் ஆகும்.

கடந்த வாரம் வருமா வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தின் 18 இடங்களில் சோதனை நடத்தினர். வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் நடந்துவரும் சோதனை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

.