This Article is From Jan 13, 2020

“நான் மீண்டும் வருவேன்!”- மேடையில் முழங்கிய கேபடன் Vijayakanth!

Vijayakanth- “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்”

“நான் மீண்டும் வருவேன்!”- மேடையில் முழங்கிய கேபடன் Vijayakanth!

“மக்களுக்கு நல்லது செய்வதற்காக நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன்"

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், மேற்கு சென்னை மாவட்டத்தின் அம்பத்தூர் பகுதியில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கும் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் (Vijayakanth), நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார். விழா மேடையிலும் விஜயகாந்த் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருக்க, அனைருவக்கும் நடுவில் அமர்ந்திருந்தார் விஜயகாந்த். நிகழ்ச்சியில் எல்லோரும் உரையாற்றிய பின்னர், “இப்போது தலைவர் உங்களிடத்தில் பேசுவார்” என்று கூறி ஒலிப்பெருக்கியை விஜயகாந்திடம் கொடுத்தனர். ஒலிப்பெருக்கியை வாங்கிய பின்னர், “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்,” என்றார். உடனே கூடியிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

5qc33l18

தொடர்ந்து, “நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன்,” என்று சொல்லும்போது வாய் குளறியது. சிறிது இடைவெளிவிட்டு, “மக்களுக்கு நல்லது செய்வதற்காக நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன். நன்றி வணக்கம்,” என்றார். இறுதியாக, “போதுமா..?” என்றார். மேடைக்குக் கீழே இருந்த தொண்டர்கள், “போதும் தலைவா” என்று கத்தினார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, ஓய்வில் இருக்கிறார் விஜயகாந்த். சிங்கப்பூர், அமெரிக்கா என்று வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எப்படியும் அவர் பிரசாரம் செய்ய களத்துக்கு வருவார் என்று குடும்ப உறுப்பினர்கள் சொன்னபோதும், கடைசி வரை அவரால் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் விஜயகாந்தின் மூத்த மகன், விஜய பிரபாகரன், கட்சிக் கூட்டங்களில் பேசி வருகிறார். 
 

.