This Article is From May 31, 2019

இன்று உலக புகையிலை தினம்…புகைப்பழக்கத்தை கைவிடலாமே!!

World No Tobacco Day: அதன்படி இந்த வருடம் “புகையிலை மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்” என்ற கருப்பொருளை பிரதானமாக கொண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இன்று உலக புகையிலை தினம்…புகைப்பழக்கத்தை கைவிடலாமே!!

ஹைலைட்ஸ்

  • ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் புகையிலையினால் ஏற்படுகிறது.
  • புகைப்பழக்கம் மற்றும் புகையிலையால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
  • 40 சதவிகிதம் புற்றுநோய்கான வாய்ப்பை புகையிலை உருவாக்குகிறது.

மே மாத இறுதியான இன்று உலக புகையிலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  வருடாவருடம் புகையிலை தினத்தன்று, ஒரு கருப்பொருளை உருவாக்குவார்கள்.  அதன்படி இந்த வருடம் “புகையிலை மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்” என்ற கருப்பொருளை பிரதானமாக கொண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.  வயது பாரபட்சமின்றி தற்போது பெரும்பாலானோரும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர்.  சிகரெட், ஹுக்கா, பீடி, சில்லும் மற்றும் சுட்டா போன்ற புகையிலை வஸ்துக்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியதாய் அமைகிறது.  மேலும் சிலர் பான், குட்கா, கைய்னி, பான் மசாலா மற்றும் மாவா போன்ற புகையில்லா புகையிலை வஸ்துகளை பயனபடுத்துகிறார்கள்.  சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் மொத்த மக்கள் தொகையில் 12 சதவிகிதத்தினர் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும், அதில் இந்தியாவில் மட்டும் மூன்றில் ஒருபகுதி மக்கள் 15 வருடங்களாக புகைப்பழக்கத்தை தொடர்ந்து 40 சதவிகிதம் புற்றுநோயாளியாக மாறியிருப்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 

beoko7rg

புகைப்பிடிப்பவர்களை காட்டிலும் அந்த புகையை சுவாசிப்பவர்களுக்குதான் அதிகபடியான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.  குழந்தைகளுக்கு நுரையீரல் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும்.  இந்த புகைகளை சுவாசிப்பதால் சுவாச பிரச்சனைகள் ஏற்படும்.  புகைப்பிடிப்பதால் மற்றும் புகையிலையை மென்று சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம், பல் சொத்தை மற்றும் சோர்வு ஏற்படும்.  அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா, பக்கவாதம், மலட்டுத்தன்மை போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.  

புகையிலையை எப்படி கைவிடுவது?

புகையிலையை தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும்.  பல வருடங்களாக புகைப்பிடிப்பவர்கள் உடனடியாக நிறுத்திவிட முடியாது.  மன உறுதி மற்றும் கட்டுப்பாடு கொண்டு புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.  புகைப்பழக்கத்தை முற்றிலுமாக கைவிட சில எளிய முறைகள் உண்டு.  

இன்றிலிருந்து புகையிலையை கைவிட வேண்டும் என உங்களுக்குள்ளேயே உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்.  அந்த தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள்.  அன்றிலிருந்து அதன் பிறகு புகையிலையை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள்.  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்லி அவர்களின் ஆதரவை பெற்றிடுங்கள்.  எதனால், எப்படி மற்றும் ஏன் புகையிலையை பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்து வைத்து கொண்டு அந்த சூழலை தவிர்த்திடுங்கள்.  உங்கள் அருகில் மற்றும் சுற்றி புகையிலை வஸ்துகளை வைக்காதீர்கள்.  மருத்துவர்களின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றலாம்.   

.