This Article is From Oct 16, 2018

’இறந்த சிறுவனின் ஆன்மா அழைப்பதாக’ இளைஞர் தற்கொலை!

நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி இளைஞர், ஒரு பக்க தற்கொலை குறிப்பை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதில், தான் பார்த்த விபத்தில் இறந்த சிறுவனின் ஆன்மா தன்னை அழைப்பதாக குறிப்பிட்டுள்ளார்

’இறந்த சிறுவனின் ஆன்மா அழைப்பதாக’ இளைஞர் தற்கொலை!

நாக்பூரைச் சேர்ந்த, சவுராப் நாக்பூர்கார் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Nagpur:

மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த சவுராப்(18) பொறியியல் கல்லூரி மாணவரான தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சவுராப் சாலை விபத்து ஒன்றை நேரில் பார்த்துள்ளார். அந்த விபத்தில் இறந்த சிறுவனின் ஆன்மா தன்னை அழைப்பதாக தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளதாக காவல் அதிகாரி துளசிராம் தாகுல்கர் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்தக் குறிப்பில், தனக்கு இரண்டுமுறை சாலை விபத்து நேரிட்டதாகவும், அது அந்த இறந்த போன சிறுவனின் ஆன்மா ஏற்படுத்தியதாகவும் எழுதப்பட்டுள்ளது. அதுவே தன்னையும் தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சவுராப் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், படிப்பில் சிறந்து விளங்கிய சவுராப் கடந்த ஒரு மாதமாக யாருடனும் பேசாமல் இருந்ததாகவும், வீட்டில் உள்ளவர்களிடம் தான் பயத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனை தற்செயலான மரணம் என்று போலீசார் பதிவு செய்துள்ளனர்.
 

.