ஹரியானா மாணவி பலாத்காரம்: பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் முக்கிய குற்றவாளி என தகவல்

பெண்ணை அழைத்துச் சென்ற இடத்தில், சிலர் காத்திருந்தனர் எனவும், அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்கள் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாணவி பலாத்காரம்: பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் முக்கிய குற்றவாளி என தகவல்

கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்

Chandigarh/New Delhi:

சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி, ஹரியானாவில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவி, ரெவாரியில் இருக்கும் ஒரு பயிற்சி மையத்துக்கு சென்ற போது அவரை 3 மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். கார் மூலம் பெண்ணைக் கடத்திய மர்ம நபர்கள், யாரும் இல்லாத இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது.

பெண்ணை அழைத்துச் சென்ற இடத்தில், முன்னரே சிலர் காத்திருந்தனர் எனவும், அவர்கள் மாணவியை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளார்கள் எனவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, காவல் துறையினர் அவர்களின் புகாரை ஏற்க மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இறுதியாக இந்த விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் என்பது தெரியவந்து உள்ளது. இது குறித்து டிஜிபி பிஎஸ் சாந்து கூறிய போது, ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மற்ற இருவர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரியான மாநில முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், “குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார்
 

Listen to the latest songs, only on JioSaavn.com