This Article is From Jan 25, 2019

முதல் குடியரசு தினம் எங்கு, எப்படிக் கொண்டாடப்பட்டது தெரியுமா…?

Republic Day 2019: நீண்ட பெரும் விவாதத்திற்கு பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் 444 கட்டுரைகள் 22 பாகங்கள் 12 அட்டவணைகள் 118 திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டது. 1,46,385 சொற்கள் இதில் இடம்பெற்றன.

முதல் குடியரசு தினம் எங்கு, எப்படிக் கொண்டாடப்பட்டது தெரியுமா…?

Republic Day Parade 2019 : குடியரசு தினத்தைப் பற்றி நினைத்ததும் நம் நினைவில் வருவது இந்திய ராணுவ அணிவரிசை.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தியர்கள் உற்சாகம் மற்றும் பெருமிதத்தோடு இந்த நாளை எப்போது எதிர்நோக்குவார்கள். குடியரசு தினத்தில் வெவ்வேறு அளவுகளில் தேசியக் கொடி மற்றும் தேசிய கொடி பேட்ச்கள் விற்பதைப் பார்க்கலாம். நிறுவனங்களில் மூன்று வர்ணங்களில் பலூன்களை ஊதி ஒன்றாக கட்டி அழகு படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். 

குடியரசு தினத்தைப் பற்றி நினைத்ததும் நம் நினைவில் வருவது இந்திய ராணுவ அணிவரிசை. இந்திய ராணுவத்தின் அணிவரிசை விஜய் செளக்கில் தொடங்கி செங்கோட்டை வரை செல்லும். இதில், இராணுவ பீரங்கிகள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் பலவும் அணிவகுப்பில் இடம் பெறுவதைப் பார்க்கலாம். 

இதைப் பார்க்கும்போது நமக்கு பல கேள்விகள் தோன்றும் அதில் ஒன்றுதான் முதல் குடியரசு தினம் எங்கு, எப்படி கொண்டாடப்பட்டிருக்கும் என்பதுதான். இதற்கான பதிலை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

1950 ஜனவரி 26-ம் நாள் காலை 10.18க்கு இந்தியா குடியசானது. சில நிமிடங்களில் 10.24க்கு டாக்டர். ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் முதல் அரசியலைமைப்புச் சட்டம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கைப்பட எழுதப்பட்டது. இந்த பிரதிகள் பாராளுமன்ற நூலகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1950 முதல் 1954 வரை குடியரசு தினத்தைக் கொண்டாட நிலையான ஒரு இடம் ஏற்படுத்தப்படவில்லை. 

1947 -ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு சுதந்திர நாடுகளாக பிரித்தது. இந்தியா சுதந்திரமாக இருந்தாலும் ஆறாம் ஜார்ஜ் மன்னர் மாநிலத்தில் தலைவராக இருந்தார். மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றம் (1946இல்) அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய அரசியலைமைப்பை உருவாக்குவதுதான் முக்கிய கடமையாக இருந்தது. நீண்ட பெரும் விவாதத்திற்கு பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் 444 கட்டுரைகள் 22 பாகங்கள் 12 அட்டவணைகள் 118 திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டது. 1,46,385 சொற்கள் இதில் இடம்பெற்றன.  

இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26இல் இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நாளையே குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். முதல் குடியரசு தினம் செங்கோட்டையில் பின்னர் நேஷனல் ஸ்டேடியம், கிங்ஸ்வே கேம்ப், அதன்பின் ராம்லீலா மைதானத்திலும் நடைபெற்றது. 1955இல் ராஜ்பாத்தை நிரந்தர இடமாக தேர்வு செய்தனர். இதுதான் முதல் குடியரசு தின அணிவகுப்பு

.