This Article is From Sep 11, 2019

ஓணம் பண்டிகையின் பிரத்யேக உணவுகள்!!

புளி ஆட்டம், படகு போட்டி போன்றவை நடத்தப்பட்டு ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  

ஓணம் பண்டிகையின் பிரத்யேக உணவுகள்!!
New Delhi:

ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.  அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பூக்களை கொண்டு கோலங்கள் போடப்பட்டு அறுசுவையும் நிறையும் வண்ணம் பல்வேறு ரெசிபிகளை செய்து அசத்துவதில் கேரள மக்களுக்கு நிகர் அவர்களேதான்.  கேரளத்தின் பாரம்பரிய உணவுகளும் ஓணம் பண்டிகையின் பிரத்யேக உணவுகள் சிலவற்றையும் பார்ப்போம்.  

1. சோறு:  கேரள மக்களின் பிரத்யேக அரிசி சாதம்.  
2. காய வறுத்தது:  நேந்திரம்பழத்தில் செய்யக்கூடிய கேரள ஸ்பெஷலான சிப்ஸ். 
3. சர்க்கர வரட்டி: எண்ணெயில் பொரிக்கப்பட்ட வாழைப்பழத்துண்டுகளை வெல்லப்பாகு சேர்க்கப்பட்டது.  
4. சேனை வருத்தது:  சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி பொரித்து மசாலா சேர்த்திருப்பது. 
5. புளிஇஞ்சி: புளி சேர்க்கப்பட்ட சட்னி. 
6. கிச்சடி: வெண்டைக்காய் அல்லது வெள்ளரி, சுரக்காய் போன்றவற்றை தயிர் சேர்த்து செய்யப்படுவது. 
7. பச்சடி: அன்னாசி அல்லது பாகற்காயை தயிர் சேர்த்து செய்யப்படும் ரெசிபி. 
8. புளிசேரி:  காய்கறிகள் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படுவது. 
9. கூட்டுக்கறி: கருப்பு நிற கொண்டைக்கடலை கொண்டு தயாரிக்கப்படுவது. 
10. ஓலன்: சுரைக்காய் மற்றும் பீன்ஸை தேங்காய் பால் சேர்த்து செய்யப்படுவது. 
11. பொரியல்:  காய்கறிகளில் தேங்காய் சேர்த்து செய்யப்படுவது. 
12. தீயல்: எல்லாவகை காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து செய்வது. 
13. எரிசேரி: தேங்காய் கிரேவியில் பீன்ஸ் மற்றும் பூசணிக்காயை மசித்து செய்யப்படுவது. 
14. அவியல்: காய்கறிகள், தேங்காய் மற்றும் பால் சேர்த்து செய்யப்படுவது. 
15. மோர்: மோரில் மசாலா சேர்த்து செய்யப்படுவது. 
16. ஊறுகாய்: இனிப்பு மற்றும் புளிப்பு சேர்த்து சேர்ந்தது. 
17. பப்படம்.
18. வாழைப்பழம். 
19. சாம்பார். 
20. ரசம். 
21. பாயாசம். 

ஓணம் பண்டிகை தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.  செப்டம்பர் 10 ஆம் தேதி உத்திராடம், 12 ஆம் தேதி ஆவிட்டம் , 13 ஆம் தேதி சதயம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது.  மேலும் இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி வீடுகளில் பிரவேசம் செய்வார் என்று நம்பப்படுகிறது.  மற்ற நாட்கள் புளி ஆட்டம், படகு போட்டி போன்றவை நடத்தப்பட்டு ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  

.