This Article is From Feb 12, 2020

தீவிரவாதத்திற்கு நிதியுதவி! ஹபீஸ் சயீதுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

2008-ல் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் 166 பேர் உயிரிழந்தனர். இதற்கு மூளையாக ஹபீஸ் சயீது செயல்பட்டார். அவரது அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்திருக்கிறது.

தீவிரவாதத்திற்கு நிதியுதவி! ஹபீஸ் சயீதுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

பாகிஸ்தானில் 23 தீவிரவாத வழக்குகளை ஹபீஸ் சயீது சந்தித்து வருகிறார்.

Islamabad:

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தார் என்ற புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் நிதி மன்றம் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது. 

தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சயீது. அவர் ஜமாத் உத் தாவா என்ற அமைப்பையும் நடத்தை வருகிறார். 2008-ல் மும்பை தீவிராத தாக்குதல் நடந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டவர்தான் இந்த ஹபிஸ் சயீது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சயீதுவின் அமைப்புகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. 

பாகிஸ்தானில் மட்டும் 23 தீவிரவாத வழக்குகளை ஹபீஸ் சயீது எதிர்கொண்டு வருகிறார். மும்பை தாக்குதல் வழக்கில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் அவர் பாகிஸ்தானில் சர்வ சாதாரணமாக நடமாடி வந்தார். பொதுக்கூட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக அவர் பலமுறை பேசினார். 

இந்த நிலையில் சர்வதேச நெருக்கடி காரணமாக சயீது மீது பாகிஸ்தான் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் போலீசில் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் அதிகாரிகள், ஹபீஸ் சயீது மீது தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தது, பண மோசடி உள்ளிட்ட புகார்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளின் அடிப்படயில் ஹபீசுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

2017-ல் ஹபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பஞ்சாப் நீதிமன்ற சீராய்வு வாரியம் விசாரணை நடத்தி அனைவரையும் 11 மாதங்களில் விடுதலை செய்தது. 

.