This Article is From Jan 03, 2019

9/11 தாக்குதல் ரகசிய ஆவணங்களை வெளியிடுவதாக மிரட்டும் ஹேக்கர்கள்!

ஹிஸ்கக்ஸ் சின்டிகேட்ஸ் லிமிடெட், லாயிட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சிறு பாலிசிகள் முதல் பெரிய பாலிசிகள் வரை இன்ஷூரன்ஸ் செய்பவை. அவர்கள் உலக வர்த்தக மையத்தையும் இன்ஷூரன்ஸ் செய்துள்ளனர்.

9/11 தாக்குதல் ரகசிய ஆவணங்களை வெளியிடுவதாக மிரட்டும் ஹேக்கர்கள்!

ஹேக்கர்கள் குழு இன்னும் பல ஆவணங்களை வெளியிடவுள்ளதாக மிரட்டியுள்ளது. 

San Francisco:

அமெரிக்காவின் 9/11 தாக்குதல் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை வெளியிடவுள்ளதாக‌ ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவிலான ரகசிய தகவல்கள் அதில் இருப்பதால் அதனை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது. 

பல இன்ஷூரன்ஸ் மற்றும் சட்ட நிறுவனங்கள் உள்ளடங்கிய நிறுவனங்களான ஹிஸ்கக்ஸ் சின்டிகேட்ஸ் லிமிடெட், லாயிட்ஸ், சில்வர்ஸ்டைன் ஆகிய நிறுவனங்களை ஹேக் செய்த அறிக்கையில் 9/11 தாக்குதல் பற்றி கூறப்பட்டுள்ளது. 

ஹிஸ்கக்ஸ் சின்டிகேட்ஸ் லிமிடெட், லாயிட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சிறு பாலிசிகள் முதல் பெரிய பாலிசிகள் வரை இன்ஷூரன்ஸ் செய்பவை. அவர்கள் உலக வர்த்தக மையத்தையும் இன்ஷூரன்ஸ் செய்துள்ளனர். 

ஹேக்கர்கள் "குறிப்பிட்ட அளவு பிட்காயின்களை தர வேண்டும் இல்லையெனில் தகவல்களை வெளியிட்டுவிடுவோம்" என்று கூறியுள்ளனர். இந்த ஹாக்கர்கள் குழு எந்த தகவல்களை வைத்துள்ளது என்ற விஷயமும் கூறப்படவில்லை. இது 9/11 தாக்குதல் பற்றியது என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

18,000 ஆவணங்கள் மூலம் 9/11 தாக்குதல் குறித்த பல சர்ச்சைகளுக்கு விடை கிடைத்துள்ளது என அந்த ஹேக்கர்கள் குழு ட்விட் செய்துள்ளது. 

மதர்போர்டு இதழுக்கு ஹிஸ்கக்ஸ் சின்டிகேட்ஸ் அளித்துள்ள விளக்கத்தில், இந்த ஹேக்கர்கள் குழு 9/11 தாக்குதல் தொடர்பான ஆவணங்களை திருடியுள்ளதாக கூறியுள்ளது. 

ஹேக்கர்கள் குழு இன்னும் பல ஆவணங்களை வெளியிடவுள்ளதாக மிரட்டியுள்ளது. 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.