This Article is From Feb 04, 2020

“ஸ்டாலினைப் போல ஒரு மோசமான நபரை…”- எச்.ராஜாவின் திடீர் சீற்றத்திற்குக் காரணம் என்ன?

"மசூதிகளில் குரான் ஓதுகிறார்களே, அது எந்த மொழியில் ஓதப்படுகிறது"

“ஸ்டாலினைப் போல ஒரு மோசமான நபரை…”- எச்.ராஜாவின் திடீர் சீற்றத்திற்குக் காரணம் என்ன?

"அவர் இந்த மண்ணின் கலாசாரத்திற்கு எதிரானவர். பண்பாட்டுக்கு எதிரி"

பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போல ஒரு மோசமான நபரையும் தமிழர்களுக்கு எதிரான தலைவரையும் பார்த்தது இல்லை என்று விமர்சித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளன. அதேபோல, தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழக்கு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன.

திமுகவின் இந்த நிலைப்பாடுகளால் கொதிப்படைந்த எச்.ராஜா, “மு.க.ஸ்டாலினைப் போல ஒரு மோசமான நபரை நான் பார்த்ததே இல்லை. அவர் இந்த மண்ணின் கலாசாரத்திற்கு எதிரானவர். பண்பாட்டுக்கு எதிரி. இஸ்லாமிற்காக அவர் தொடர்ந்து போராடி வருகிறார். அது அரபு நாகரீகம்தானே. அவர் நாகரீகமே இல்லாத ஒரு நபர். 

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழக்கு செய்யப்பட வேண்டும் என்று சொல்கின்றனர். மசூதிகளில் குரான் ஓதுகிறார்களே, அது எந்த மொழியில் ஓதப்படுகிறது. அதை நான் குறை கூறவில்லை. அவர் அவருக்கு அவரவர் மொழியும் பண்பாடும் பெரியது. இதில் வந்து அப்படி செய்யக் கூடாது, தமிழில் தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்,” என்று கொதித்துள்ளார். 

தஞ்சை பெரிய கோயிலில் சமஸ்கிரதத்தில் சொல்லப்பட்டு வரும் மந்திரங்கள் தமிழில் சொல்லப்பட வேண்டும் என்று தமிழ் அமைப்புகளும், தமிழக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனால் தமிழக அரசு, இரு மொழிகளிலும் இந்த முறை குடமுழக்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனால் பிரச்னை ஓரளவு தணிந்திருந்தாலும், தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் மட்டுமே மந்திரங்கள் சொல்லப்பட வேண்டும் என்ற வாதம் வலுத்து வருகிறது. 

.