This Article is From Nov 04, 2019

ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்!!

கடந்த ஆக.5 தேதி ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கி வரப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பு படையினர் அங்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

இன்றைய தாக்குதலில் பயங்கரவாதிகள் சாலையோர வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Srinagar/ New Delhi:

ஸ்ரீநகரின் காய்கறி சந்தையில் இன்று பிற்பகல் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நடைபெறும் இரண்டாவது கையெறி குண்டு தாக்குதல் ஆகும்.

இதுதொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஹிரி சிங் சாலையில் உள்ள காய்கறி சந்தையில் நடந்த இந்த தாக்குதலில், காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய தாக்குதலில் பயங்கரவாதிகள் சாலையோர வணிகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், நகரத்தில் உள்ள சந்தைகள் அனைத்து மூடப்பட்டிருந்தத்து. இதைத்தொடர்ந்து, தற்போது சந்தை பகுதி முழுவதும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

வடக்கு காஷ்மீரில் அண்மையில் நடந்த தாக்குதலில் பேருந்துக்காக காந்திருந்தவர்கள் மீது கையெறி குண்டு வீசியதில் 15 பேர் காயமடைந்தனர். அந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இன்று தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 

கடந்த ஆக.5 தேதி ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கி வரப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பு படையினர் அங்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர். 

இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பயங்கரவாதிகள்  வெளிமாநில லாரி ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த தனித்தனி தாக்குதலில் 11 வெளிமாநிலத்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த அக.31ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

.