This Article is From Jul 18, 2020

மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது: பெரியார் சிலை அவமதிப்புக்கு ராகுல் கண்டனம்!

ராகுல்காந்தி, பெரியார் சிலை அவமரியாதை செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது: பெரியார் சிலை அவமதிப்புக்கு ராகுல் கண்டனம்!

மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது: பெரியார் சிலை அவமதிப்புக்கு ராகுல் கண்டனம்!

ஹைலைட்ஸ்

  • பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதிப்பு
  • போத்தனூர் பகுதியை சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் சரண்
  • பெரியார் சிலை அவமதிப்புக்கு ராகுல் கண்டனம்!

மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என பெரியார் சிலை அவமதிப்புக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதித்து சென்றனர். இதைத்தொடர்ந்து, பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, இதற்கு காரணமானவர்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் கூடி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, போலீசார் பொது அமைதியை சீர் குலைத்தல், கலகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இதனிடையே, போத்தனூர் பகுதியை சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் சிலை மீது காவி சாயம் பூசியதாக காவல் நிலையத்தில் சரணடைந்தார். தொடர்ந்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, பெரியார் சிலை அவமரியாதை செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது பதிவிட்டுள்ளார். மேலும், உடன் பெரியார் சிலை அவமரியாதை தொடர்பான ஆங்கில செய்தி ஒன்றையும் மேற்கொள் காட்டி பதிவு செய்துள்ளார்.
 

.