This Article is From Feb 10, 2020

பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டுவந்தால் டீ, ஸ்நாக்ஸ் இலவசமாக தரும் டீக்கடை!!

மத்திய அரசின் 'ஸ்வச் பாரத் அபியான்' தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'ப்ளாஸ்டிக் கஃபே' என்ற டீக்கடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டுவந்தால் டீ, ஸ்நாக்ஸ் இலவசமாக தரும் டீக்கடை!!

'பிளாஸ்டிக் கஃபே' டீக்கடை தகோத் பஞ்சாயத்து சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Vadodara:

பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்தால், அதற்கு மாற்றாக டீ மற்றும் ஸ்நாக்ஸை இலவசமாக வழங்கும் டீக்கடை ஒன்று குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் 'ஸ்வச் பாரத் அபியான்' தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'ப்ளாஸ்டிக் கஃபே' என்ற டீக்கடை தகோத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே முதன்முறையாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள டீக்கடை இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலவச டீக்கடை குறித்து அவர்கள் கூறும்போது, '2 நாட்களுக்கு முன்பாகத்தான் பழங்குடிகள் அதிகம் இருக்கும் தகோத் மாவட்டத்தில் டீக்கடை அமைத்துள்ளோம். பிளாஸ்டிக் குப்பைகள் தெருவில் இருக்க கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வருவோருக்கு ஸ்நாக்ஸூம், அரை கிலோ கொண்டு வருவோருக்கு டீயும் வழங்குகிறோம்' என்று தெரிவித்தனர். 

இங்கு வழங்கப்படும் ஸ்நாக்ஸ், மாநில அரசின் சக்தி மண்டல் திட்டத்தின் கீழ் பெண்களால் தயாரிக்கப்படுகிறது. 

இலவச டீ திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, கணிசமான அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கழிவுகள் மறு சுழற்சிக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டம் மற்ற தாலுகா மற்றும் மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினர். 
 

.