This Article is From Nov 15, 2018

"ட்ரம்ப் ட்விட்டுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" - ஃப்ரான்ஸ் அதிபர்

ஃப்ரான்ஸில், முதல் உலகப்போரின் 100வது ஆண்டு நிறைவு விழாவுக்கு வருவதற்கு முன் ஃப்ரான்ஸ் அதிபரையும், அவரின் கருத்தான ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவம் பற்றியும் விமர்சித்தார் ட்ரம்ப்.

இவரது ட்விட்டுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நாம் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கக் கூடாது

Paris:

டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சையான ட்விட்டுக்கு ஃப்ரான்ஸ் பதில் சொல்லியுள்ளது. ஃப்ரான்ஸில், முதல் உலகப்போரின் 100வது ஆண்டு நிறைவு விழாவுக்கு வருவதற்கு முன் ஃப்ரான்ஸ் அதிபரையும், அவரின் கருத்தான ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவம் பற்றியும் விமர்சித்தார் ட்ரம்ப்.

இதற்கு ஃப்ரான்ஸின் செய்தி தொடர்பாளர் பெஞ்சமின், "க்ரீவெக்ஸ் 2015 நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 130 பேரை நினைவு கூர்ந்தார். ட்ரம்புக்கு பொது கண்ணியம் என்னவென்றே தெரியவில்லை. தாக்குதல் நடந்த நினைவு தினமான நவம்பர் 13ம் தேதி ட்ரம்ப் அவமானகரமானது என்ற கருத்தை முன்வைப்பது தவறான விஷயம்" என்றார்.

அமெரிக்க அதிபர் ஃப்ரான்ஸ் சென்று இறங்குவதற்கு முன்,  "ஃப்ரான்ஸ் அதிபர் மார்க்கான் அமெரிக்கா,சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து, ஐரோப்பாவை பாதுகாக்க ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப் இந்தச் சர்ச்சையான ட்விட்டை செய்தார். அதில்  NATO ஒப்பந்தத்துக்கு ஐரோப்பா அளிக்க வேண்டிய பங்கையே இன்னும் சரியாக கட்டவில்லை. இதில் ஐரோப்பிய ராணுவமா என்றும் விமர்சித்தார் ட்ரம்ப்.

செவ்வாயன்று பதிவு செய்த ட்விட்களில் மார்க்கானை கடுமையாக விமர்சித்திருந்தார் ட்ரம்ப். '' 26 சதவிகிதம் அப்ரூவல் ரேட்டிங், 10% வேலைவாய்ப்பின்மை என ஃப்ரான்ஸ் மார்க்கான் ஆட்சியில் தடுமாறுவதாக தெரிவித்தார்.

தன்னை தேசியவாதி என்று கூறிக்கொண்ட ட்ரம்ப், ஃப்ரான்ஸில் தான் தேசியவாதிகள் அதிகம் பேர் உள்ளனர் என்றார். ட்ரம்பின் ட்விட் குறித்து மார்க்கானிடம் கேட்டதற்கு ''இவரது ட்விட்டுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நாம் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.