This Article is From Nov 15, 2019

Flipkart : புதிய முயற்சியாக பிளாஸ்டிக் பேக்கேஜ்களை வீடுதேடி சேகரிக்கிறது

மும்பை, பெங்களூர், டெஹ்ராடூன், டெல்லி, கொல்கத்தா, புனே, அகமதாபாத் ஆகிய நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் நுகர்வோரிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை சேகரிக்க ஒரு முன்னோட்ட திட்டத்தை நடத்துகிறது.

Flipkart : புதிய முயற்சியாக பிளாஸ்டிக் பேக்கேஜ்களை  வீடுதேடி சேகரிக்கிறது

ஸ்வச் பாரத்தின் கனவை அடைய எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.

Bengaluru:

ஃபிளிப்கார்ட் நிறுவனம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 

மும்பை, பெங்களூர், டெஹ்ராடூன், டெல்லி, கொல்கத்தா, புனே, அகமதாபாத் ஆகிய நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் நுகர்வோரிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை சேகரிக்க ஒரு முன்னோட்ட திட்டத்தை நடத்துகிறது. 

இந்த முன்முயற்சி  பிளாஸ்டிக் பேக்கேஜிங்கை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதை உறுதி செய்துள்ளது. “ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பல்வேறு வகையிலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிலையில் அதனை மாற்றவே துணிச்சலான இந்த முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.  

பிளாஸ்டிக் பொருட்களை விருப்பமுள்ளவர்களின் வீடு வீடாக சென்று  சேகரிக்கவுள்ளோம்.” என்று பிளீப்கார்ட் குழுமத்தின் தலைமை நிறுவன விவகார அலுவலர் ரஜ்னீஷ் குமார் கூறியுள்ளார். ஸ்வச் பாரத்தின் கனவை அடைய எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். 

ஒற்றை பயன்பாட்டை பிளாஸ்டிக்கை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையாக இது அமையும்” என்று குமார் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியின் கீழ் வாடிக்கையாளர்கள் தானே முன்வந்து  பிளாஸ்டிக் பேக்கேஜிங் ஒப்படைக்குமாறு அறிவிப்பை நிறுவனமே அனுப்பும். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும். இதன்படி பொறுப்புடன் பிளாஸ்டிக் அகற்றப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

.