This Article is From Mar 08, 2020

கொரோனா வைரஸ் பரவல்:  ஆன்லைனில் 16 மடங்கு விலையுயரும் ஹான்ட் வாஷ்கள் 

எங்கள் ப்யூர்ஹேண்ட்ஸ் கை சுத்திகரிப்பு திரவத்தின் விலையினை நாங்கள் அதிகரிக்கவில்லை. எங்கள் சுத்திகரிப்பு திரவத்தின் விலை விகிதங்கள் அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களால் சட்டவிரோதமாக அதிகரிக்கப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் பரவல்:  ஆன்லைனில் 16 மடங்கு விலையுயரும் ஹான்ட் வாஷ்கள் 

கொரோனா வைரஸ்: பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனையாளர்கள் கை சுத்திகரிப்பு திரவங்களுக்கு மிக அதிக விலையை நிர்ணயித்திருக்கிறார்கள்

ஹைலைட்ஸ்

  • Some sellers on etailers quote 16 times price for hand sanitizer bottle
  • Arrival of coronavirus in India has led to panic buying
  • Experts say washing hand regularly way to minimise risk
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் என்பது பீதியைப் பெரிய அளவிற்கு உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் கை சுத்திகரிக்கும் திரவங்களின் பயன்பாடுகளும் தேவைகளும் அதிகரித்துள்ளன.

பிளிப்கார்ட் போன்ற சில்லறை விற்பனையாளர்களில் சில விற்பனையாளர்கள் 30 மில்லி பாட்டில் ஹேண்ட் சானிட்டீசருக்கு அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) 16 மடங்கு அதிகமாக நிர்ணயித்து வருகின்றனர். வைரஸ் தொற்றுநோயைக் குறைக்க உதவும் என்பதால், கைகளைச் சுத்தமாக வைத்திருக்கச் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில் அதற்கான தேவையும், பயன்பாடும் சமீபத்தில் அதிகரித்திருக்கிறது. 

இந்த நிலையில் பிளிப்கார்ட்டில், சூப்பர் ரீடெயில்ஸ் என்ற விற்பனையாளர் ஒரு ஹிமாலயா ப்யூர்ஹேண்ட்ஸ் 30 மில்லி பாட்டிலை ரூ .999 க்கு நிர்ணயித்திருந்தார். இது எம்ஆர்பிக்கு மேலே பல மடங்கு அதிகமான விலையாகும்.

இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிளிப்கார்ட் "ஒரே தயாரிப்புக்கான வெவ்வேறு விலைகளை நீங்கள் காணலாம், ஏனெனில் இது பல விற்பனையாளர்களால் பட்டியலிட்டிருக்கின்றது." என விளக்கமளித்திருந்தது.

ட்விட்டரில் உள்ளவர்கள் கை சுத்திகரிப்பார்களின் அதிக விலை குறித்தும், அதன் தேவை தற்போது அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி புகார் தெரிவித்துள்ளனர்.

"மக்களின் அதிகமான தேவைக்கு 30 மில்லி கை சுத்திகரிப்பு திரவத்தினை 999 ரூபாய்க்கு விற்க இது நியாயமா?" ஒரு ட்விட்டர் பயனர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

"நிறுவனங்கள் உண்மையில் 30 மில்லி ஹேண்ட் சானிடைசரை ரூ .999 க்கு விற்று மக்களுக்கு உதவக் கடுமையாக உழைத்து வருகின்றன, அது ரூ 1 தள்ளுபடியுடன் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். எம்ஆர்பி விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" என்று ஹிமான்ஷு குமார் ட்வீட் செய்துள்ளார். 

இவ்வாறாகப் புகார் எழுந்ததையடுத்து ஹிமாலயா மருந்து நிறுவனம் "இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்" என்றும் ட்வீட் செய்துள்ளது.

"எங்கள் ப்யூர்ஹேண்ட்ஸ் கை சுத்திகரிப்பு திரவத்தின் விலையினை நாங்கள் அதிகரிக்கவில்லை. எங்கள் சுத்திகரிப்பு திரவத்தின் விலை விகிதங்கள் அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களால் சட்டவிரோதமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நேர்மையற்ற விற்பனையாளர்களுடன் நாங்கள் எந்த வகையிலும் தொடர்புப்படுத்தவில்லை. இவை சட்டவிரோத நடைமுறைகள் மற்றும் சட்டத்தின்படி உறுதியாக்கத் தண்டிக்கப்பட வேண்டும், "என்று ஹிமாலயா நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் கொரோனா வைரஸுக்கு உள்ளாகியிருக்கக்கூடிய நிலையில் தற்போது நாட்டில் மொத்தமாக கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு கடல் உணவு சந்தையில் கண்டறியப்பட்டது, அங்கிருந்து அது மற்ற நாடுகளுக்கு விரைவாகப் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

.